116 தமிழ்க்கடல் அலை ஓசை தோர் தமிழரென்பதும் சிறந்த பல காரணங்களால் பெறப்படு கின்றன. 'இலத்தீன் மொழியில் 'தாப்ரொபேன்' என்று வழங்கும் பெயர், தாம்பிரபரணி என்பதன் சிதைவென்று மொழி நூல் வல்லார் கூறுகின்றமையானும் இந்தியாவும், கடல்கோட்பட்ட தமிழ் நிலமும் ஒரு காலத்தில் ஒன்றாயிருந்த தென்பதற்கு இது வும் ஓர் சான்றாகின்றது. இன்றுள்ள தாம்பிரபரணி என்னும் நதி கடல்கோளுக்கு முன்னர் இலங்கை முழுதும் சென்று பயன் பட்டிருந்தமையின், இலத்தீன் மொழியினர் இலங்கைக்கு 'தாப்ரொபேன்' எனப் பெயர் வைத்தனர்.' 'சாவக முதலிய ஐவகைத் தீவிலுள்ள மொழிகளும், இமய மலைச் சரிவில் ஒருவகைச் சாதியார் பேசுகின்ற மொழியும், விந்திய மலையின் கிழக்கு முனையிலுள்ள சூடிய நாகபுரியில் ஓர் வகைச் சாதியார் பேசுகின்ற மொழியும், அம்மலையில் அபு சிகரத் தில் வசிப்பவர் தம் மொழியும், பெலுஜிஸ்தான் தேசத்தில் தவுத்புத்திர என்னும் சாதியார் பேசுகின்ற மொழியும் தமிழின் சிதைவெனச் சரித ஆராய்ச்சியில் வல்ல பெரியோர் கூறுவர். தவுத்புத்திர என்பது திராவிடபுத்திர என்பதன் சிதைவு.' 'ஆப்கனிஸ்தான் நாட்டில் ஓர் நகருக்குத் 'தமிழுக்' என்னும் பெயர் வழங்கி வருவதோடு அந்நகர மக்களும் தமது மொழியோடு தமிழையும் கலந்து பேசுகின்றார்கள் என்பர்.' "ஆசியாவில் சைபீரியா நாட்டில் அக்கிரீன் சாதியார் மொழியும், வட ஐரோப்பாவில் பின் சாதியார் மொழியும், மீதியா நாட்டிலுள்ள பிகிஸ்டன் சாசனங்களில் எழுதியுள்ள மொழியும், திராவிட சம்பந்தம் பெற்றுள்ளன. பால்டிக் கடல் முதல் மலையாளம் வரையில் திரவிட சம்பந்தமாகும். திரவிடம் தொன்று தொட்டுள்ளது; ஆரியத்துக்கு முன் நாகரிகமடைந் தவர் திராவிடர். ஆஸ்திரேலியா தேசத்து வடபால் மேல்பா லுள்ள மக்களின் மொழியுள், நான், நாம், நீ, நீங்கள், அவன் என்னும் சொற்கள் ஒத்துள்ளன. மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளுவம், குடகு, தோடம், கோட்டம், காண்டி, ஓரான் முதலிய மொழிகள் தமிழ்ச் சிதைவு' என்று சரித்திரப்
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/137
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
