'மொழிநூல்' கண்ட மூதறிஞர் 117 புலவர் ஹண்டர் என்பவர் கூறுவர். பாலி, பிராகி,திமல் என்னும் மொழிகளும் தமிழ்ச் சிதைவாம் என்பர்.' 'பெரும் பான்மையும் எல்லா மொழிகளிலும் அம்மை, அப்பன் என்னும் தமிழ்ச்சொல் வழக்குள்ளது. ஆரியர்க்குமுன் நாகரிகமடைந்த எகிப்து நாட்டு நூல்களும் தமிழரது நாகரிகத்தை எடுத்துக் கூறுமென்பர். 'எட்வர்டு களார்டு என்பவர் தாம் எழுதிய யூதருடைய சரித்திரத்தில் மங்கோலியர், பின்னிஸ் ஆகிய சாதியாருக்கு மூலமக்களா யிருந்தவர்கள் ஈழநாட்டிலிருந்து வந்து பாரசீக வளைகுடாவைச் சூழ்ந்து குடியேறி யிருந்தார்கள் எனவும், சுமேரி யருக்கும் எகிப்தியருக்கும் முன்னமேயே அவர்கள் நகரங்களை யும் தலைநகர்களையும் ஏற்படுத்தினர் எனவும், அவற்றிற்கு 'ஊர்' என்று பெயர் எனவும் கூறியுள்ளார்.' இவ்வாறு தமிழர்களின் தொன்மைச் சிறப்பையும் 'தமிழ்' மொழி பரவி நின்ற நிலையையும் எடுத்துக் காட்டிய ஆசிரியர்- தமிழின் உயர்வையும் விளக்கியுள்ளார். 'ஊழிக்காலத்துக்கு முன்னமே தமிழுள்ளது. வேதங்களுக்கு முன்னரே தமிழுள் ளது' என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன. 'இருக்குவேதம், குமரிநாடு கடல் கொள்ளப்படுமுன் உண்டாயிற்று; அக் கடல் கொண்ட நிகழ்ச்சியை அதர்வண வேதம் எடுத்துக் கூறும் என்றலின் வேதங்களுக்கு முன்னரே தமிழுள்ள தென்பது உண்மைக் கூற்றே.' ஆரியத்துக்கு முன் தமிழ் இருந்ததென்பது கடுக்கனுக்கு முன் பொன் இருந்ததுபோலக் கொள்ள வேண்டும். இனிப் பாளியும் பஞ்சத் திராவிடமும் தமிழின் வழிமொழிகளாம். கிரந்தம் இவ்வெல்லாவற்றினின்றும் உண்டான சார்புமொழி யாகும். கிரந்தத்துக்குப் பிறகு ஆரியமென்னும் பெயர் உண் டாயது. ஆரியத்தின் திருத்தம் சமக்கிருதம்.' 'வடமொழிக்கண் எல்லாக் கலைகளும் நிரம்பியிருத்தலின், புலவர்கள், அதுவே முன்னுண்டாய மொழியெனவும் ஏனைய வெல்லாம் அதன் வழிமொழி யெனவும் கூறுவர்.
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/138
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
