பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மொழிநூல்' கண்ட மூதறிஞர் 119 ஈண்டுத் தூய்மை (சுத்தம்) தமிழ்ச் சந்தமே உடையது என்ப தாம். நன்னய பட்டரென்பவர், தமிழின் வழிமொழியாகிய தெலுங்கிற்குத் தமிழ் வழக்குப்படி இலக்கணம் செய்யாது, ஆரிய வழக்குப்படி இலக்கணம் செய்தனர். அது பொருந்தாது. அச்ச தெலுங்கில் இராமாயணம் உள்ளது. இது தமிழ்ச் சந்தவின்ப முடையது. மலையாளம், தமிழின் வழிமொழி யென்று நன்கறிந் திருந்தும் இலக்கணம் மட்டும் ஆரிய வழக்குப்படியே செய் தனர். அதுவும் பொருந்தாது. கூர்ச்சரம், மராட்டியம் முதலிய மொழிகளின் சிதைவாம். இனி மராட்டியம் முதலிய மொழிகள் வடமொழிக் கலப்பைப் பெற்றன. மலையாளம் கன்னடம் முதலியன அக்கலப்பைப் பெறுகின்றன. பஞ்ச திராவிடத்துள் தெலுங்கே வடமொழிக்க கலப்பை முதன் முதல் பெற்றது. தெலுங்கர் ஆரிய வர்த்தத்தை அடுத்திருந்ததும் அதற்குக் காரணமாகும். பிற மொழிகளிற் போந்த தமிழ்ச் சொற்கள் சிறிது (ஒலி) வேறுபட்டமையின், அவ்வக் காலத்துள்ளார். அவற்றை ஒதுக்கிக்கொண்டே யிருந்தமையின் வேறு வேறு மொழிகளாகப் பிரிந்து வளர்ந்தன. இக் காலத்துத் தெலுங்கில் வழங்கும் வீகம்,வீய முதலிய சொற்கள் பிங்கல நிகண்டிலுள்ளமையின் அவை அக் காலத்துத் தமிழ்க்கண் வழங்கியிருத்தல் வேண்டும். தமிழினின்று பஞ்ச திராவிடமும், பாலி முதலிய மொழிகளும் உண்டாயின. இவ் வெல்லாவற்றினின்றும் பாகதம் பிரிந்தது. ஆரியம், வேதம் முதலியன நிறைந்துள்ள தெய்வமொழி என்று அடிபடுகின்றமையின் தெலுங்கு முதலியன அதனினின்று பிறந்தனவெனின் அவ்வம் மொழியார் கனிவு காட்டுதலும், தமிழினின்றும் அவை பிறந்தனவெனின் முனிவு காட்டுதலும் பற்றுள்ளமேயன்றி முறைமையாகாது. அப் பற்றுள்ளத்தினின் றும் நீங்கி உண்மை எதுவென ஆராய்ந்து தெளிதல்வேண்டும். தமிழில் தோன்றிய தொன்மையான நூல்கள் அழிந்து அதன் புதுமை முதலாயின வேறுபட்டமையானும் ஆரிய