பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 தமிழ்க்கடல் அலை ஓசை நூல்கள் அழிவு படாது அதன் புதுமை முதலாயின வேறு படாமையானும் ஆரியம் தமிழுக்குப் பிற்பட்டதென்பது பொருந்தும். இவ்வாறு தமிழின் தொன்மையையும், முதன்மையையும் பலவாறு விளக்கிக் கூறிய கார்த்திகேயனார் தமிழின் ஒலியும் சொல்லும் இயற்கையாக அமைந்தவாற்றையும் விளக்கியுள் ளார். இயற்கை யொலி பழந்தமிழில் ஒரு சிறிது திரிந்தும், தமிழில் (வளர்ந்த செந்தமிழில்) அதனிற்றிரிந்தும், மலையாள கன்னடங்களில் மேலும் திரிந்தும், பாகதங்களில் அதனின் மிகத் திரிந்தும் உருகுலைந்துள்ளது. ஆதலின் தமிழ் மொழி யில் அன்றிப் பிறமொழிக் கண்ணுள்ள எல்லாச் சொற்களுக்கும் காரணம் (பொருள் மூலம்) அறிந்து கூறல் அரிது. தமிழ்ச் சொற்களை மட்டும் ஒருவன் நன்கு ஆராய்ச்சி செய் தலைத் தலைக்கொள்வனாயின் ஏனைய மொழிகளை யெல்லாம் ஆராய்ச்சி செய்வதற்கு இதுவே கருவியாகு மென்பதிற் சிறிதும் ஐயுறவில்லை. தமிழ்ச் சொற்களெனவே சிறுபான்மை அதன் வழிமொழிகளாகிய கன்னடம் முதலியனவும் அடங்கும் " பண்டைக் காலத்துள்ள சொற்களின் தன்மையும் அவற்றின் தோற்ற வரலாறுகளும் அறிதற்கு அவை காத்து வழங்கப் படவேண்டும் என்னும் கருத்தினை விளக்கிய ஆசிரியர், அவ் வாறு வழங்கிய சொற்கள் பலவற்றை எடுத்துக் காட்டி யுள்ளார். கடற் கரையை உணர்த்தும் "புலம்பு" என்பது ஐங்குறு நூற்றிலும்,கரடியை உணர்த்தும் "வெண் பல்லம்" என்பது உரிச்சொல் நிகண்டிலும், திரட்சியை உணர்த்தும் "அவை யம் என்பது மதுரைக் காஞ்சியிலும், மேலிடத்தை உணர்த் தும் "மேதகம் என்பது சம்பந்தர் தேவாரத்திலும், குளிர்ச் சியை உணர்த்தும் "ஓமம் என்பது சுந்தரர் தேவாரத்திலும்; மயிலிறகை உணர்த்தும் "புத்தகம்" என்பது மருத்துவ நூலிலும் ; மூங்கிலை உணர்த்தும் நால் என்பது சுப்பிர

  • 1

"