122 தமிழ்க்கடல் அலை ஓசை தமிழின் மாட்சி குறித்து அவர் கூறுவது இது: ஆரியத்தினும் தமிழ் தொன்மையுடைய தென்பதும், ஆரியம் வருவதற்கு முன் சக முழுதும் தமிழ் இருந்த தென் பதும், ஆரியத்திற்கு முன்னேயே தமிழ் திருத்தப்பாடுள்ள தென்பதும்,தமிழ்ச் சொற்கள் (வடமொழி முதலான) பற்பல மொழிகளிலும் கலந்துள்ளன என்பதும், தமிழ்ச்சொல்லில் பொருள் பொதிவு (பொருள் அடி) உள்ள தென்பதும், வட மொழி முதலியவற்றினும் தமிழ் பாவிலினிய தென்பதும், தமிழ் திணைபால் முதலிய பகுப்பால் சிறந்த தென்பதும், வடமொழி முதலியவற்றிலும் தமிழ்ச் சொற்றொடர் அழகுடைய தென்பதும், தமிழில் நீதி நூல்கள் நடுவு நிலைச் சிறப்புற்றுள்ளன என்பதும் தமிழரசு தெடுநாள் இருந்த தென்பதும், தமிழரிடத்து வீரம். மிக்கிருந்த தென்பதும் பிறவும் பெறப்பட்டன. மேலும் வடமொழியில் உலகத்து முதன்முதல் ஏற்பட்ட இயற்கை நிலப் பாகுபாடாகிய குறிஞ்சி முதலிய திணைகளுக்கும் இயற்கைக் காலப் பாகுபாடாகிய பெரும் பொழுது, சிறுபொழுது என்னும் முதற் பொருளுக்கும் இலக்கணம் இன்மையானும்; செயற்கையிற் செயற்கையாய்க் கனைத்த லோசையும் உரப்பலோ சையும் மிகுந்திருக்கின்றமையானும்; செயற்கையாய ஐகார ஔகார யகார முதன் மொழிகளால் சிறந்திருக்கின்றமை யானும்; பிற்காலத் துண்டாய உபசர்க்கச் சொற்களும், தொடர் மொழிகளும் நிரம்பியிருக்கின்றமையானும்; ஒன்று முதலிய எண்களுக்கு வரிவடிவமும், நுணுகி யுணர்வதற்கு முந்திரை, இம்மி, சுவடு முதலிய அளவு பெயர்களும் மிளா, பூட்டு, சாவி முதலியவற்றுக்குத் தனிச் சொற்களும் இன்மை யானும்; ஆகுபெயர் இலக்கண மின்மையானும்; உரை வழக்கின்மையானும் தமிழ்மொழியில் பவ்வீ முதலிய பெயர் களும் ஆண்குறி பெண்குறி முதலியவற்றை உணர்த்தும் சில பெயர்களும் அவையல் கிளவி ஆயினமை போலக் கடிதடம் நிதம்பு முதலிய பெயர்களும் அங்ஙனம் ஆகாமையானும்; நாவிற்குக் கடினமாகிய வல்லினமெய்யீற்றுச் சொற்கள் உண்மையானும்; செயற்கை எழுத்துகள் மொழி முதலில் வரு
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/143
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
