பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மொழிநூல்' கண்ட மூதறிஞர் 123: கின்றமையானும்; மூவசைச் சொற்கள் மிகுதிப்பட்டிருக்கின்ற மையானும்; நாவின் செயற்கை நிகழ்ச்சியாகிய மயக்கம் பெரி துண்மையானும் பிறவாற்றானும் ஆரியம் தமிழுக்குப் பிற குண்டாய தென்பதே துணிபு. இவ்வாறு கூறிய ஆராய்ச்சியாளர் தமது முடிவுக்குத் துணை யாக மேல்நாட்டு அறிஞர் சிலர் தமிழைக் குறித்து வியந் துரைத்த செய்திகளையும் எடுத்துக் காட்டியுள்ளார். "நடுவு நிலைமையாகப் பார்க்குமிடத்து உலகத்தார் இது வரை அறிந்தவற்றுள் மிகவும் மேன்மையான கலைஞானங்களில் ஒன்றைத் தமிழர் (தமிழில்) பெற்றிருக்கின்றனர் என அறிஞர் பெர்சிவல் வேதபுருடன்" என்னும் தமது சிறந்த நூலில் குறிப்பிட்டுள்ளதும்; "சுருங்கக் கூறல் என்னும் அழகில் நிறைந்த பொருட் பொதிவை அடக்கிக் கொண்டிருக்கும் தன்மை தமி ழொழிந்த வேறு எந்த மொழிக்கும் இலது. மனத்தின் தோற் றங்களை வெளியிடுவதில் தமிழிலும் நுணுக்கமாகவும், தெளிந்த தத்துவமாகவும் சொல்லத்தக்க பிறமொழிகள் இல்லையென்று உறுதிபடச் சொல்லலாம். இம்மொழி, மனோபாவனைக் கேற்ற வலிமையை மனத்திற்குத் தருவதுடன், அதன் செம்பாகமும் தருக்க வழக்கும் அவ் வண்ணமே மனத் தோற்றத்தைத் தெளி வாகக் கூறுதற்கு ஏற்ற வலிமையையும் தருகின்றன" என அறிஞர் சார்லஸ் கோவர் என்பார் கூறியுள்ளதும்; "திராவிட மொழிகளுக்குத் தலைமையாக நிற்கத்தக்க தமிழ் மொழியானது, மக்களாற் பேசப் படுவதற்கு மிகுதியும் பொலிவும் திருத்தமும், சீரும் உடைய மொழிகளுள் ஒன்று" எனவும், "ஆந்திர திராவிட செய்யுட்களின் சிறப்பினை உணர்ந்து ஐரோப்பாவில் நன்கு கற்றல் வேண்டும். அங்ஙனம் கற்பாராயின் கிரீக்கு இலத்தீன் செய்யுட்களுக்கும் ஈடானவை உலகில் இல்லை என்பதாக எண்ணி அவை புகழப்பட்டது முற்றிலும் நியாயந்தானா? என்பது குறித்துத் தகுதியான நடு நிலைமையுள்ள சான்றோர் பின்னர்த் தீர்மானிக்க வேண்டியிருக்கும்' எனவும் அறிஞர் டெயிலர் என்பார் கூறியுள்ள கருத்தும், தமிழின் தனிச் சிறப் புக்குச் சான்றாக அவரால் எடுத்தாளப்பட்டுள்ளன.