பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 தமிழ்க்கடல் அலை ஓசை மேலும் தமிழ் மக்கள் தாய்மொழியைப் போற்ற வேண்டியது அவரது கடனாதலையும் மூதறிஞர் வலியுறுத்தத் தவறவில்லை. "பதினோராவது நூற்றாண்டில் ஆங்கில நாட்டில் பிரஞ்சு மொழி பரவி ஆங்கிலந் தாழ்ந்து ஒடுங்கித் தன்னிலை குலையுங் கால், அக்காலத்து வாழ்ந்த ஆங்கிலப் புலவர்கள் தம் தாய் மொழியில் பற்றுள்ளம் வைத்துப் பதினான்காம் நூற்றாண்டு முதல் பண்டைய நிலைமைக்குக் கொண்டுவர முயன்றனர். அதனா லன்றோ ஆங்கிலம் இக் காலத்து வளர்ச்சியுறலாயிற்று? அதன் வளர்ச்சியோடு பொருந்திப் பரவிய நிலையால், தமிழும் ஒடுங்கித் தன்னிலை குலைகின்றமையின், தமிழரும் அவர்போல் பற்றுள்ளம் வைத்துத் தமிழை உயர்த்துதல் வேண்டும். தமிழர்கள் பற்று வைத்துத் தமிழ்நூல்களைக் கற்றல் வேண்டும். வறியவனா யினும் தமிழ் கற்க. கற்பிக்க. எப்பொழுதும் தமிழையே தெய்வம் போலவும் நற்றாய் போலவும் சிந்திக்க. நீ தமிழ் மயமாவை, நின் மக்களும் தமிழ் மயமாவர். நின்கை தமிழ் நூல் எழுதுக; நின்வாய் தமிழையே பேசுக; நின் மனம் தமிழையே சிந்திக்க. $ இவ்வாறு கார்த்திகேயனார் ஊட்டிய தமிழ்ப் பற்று தமிழ் இனத்தின் குருதி யெல்லாம் கலந்து நெஞ்செல்லாம் நிறை வதாக!