பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடமொழி உயர்வுக்குக் கண்டனம் எழுப்பிய செல்வகேசவராயர் இன்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், கி.பி. 1864இல் சென்னைக்கு அருகில் உள்ள திருமணம் என்னும் சிற்றூரில் பிறந்தவர் செல்வகேசவராயர். அவருடைய தந்தை ஒரு தமிழாசிரியர். அதனால் அவர் இளமையிலேயே தமிழொடு ஆங்கிலமும் பயின்றார். பச்சையப்பன் கல்லூரியில் படித்துத் தேர்ந்தார். கலை இளைஞர் (பி.ஏ.) பட்டமும் பெற்றார். அக் காலத்தில் கல்லூரியில் படிப்பவர்கள் தமிழ் படித்தாக வேண்டும் என்ற முறை இல்லை. அது விருப்பப் பாடமாகவே இருந்தது