பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 தமிழ்க்கடல் அலை ஓசை .எனில், தமிழே படித்துப் பட்டம் பெறுவதிலே ஆர்வமா பிறக்கும்? எனினும் செல்வகேசவர் தமிழ்மொழித் துறையி லேயே முதுகலைப் (எம்.ஏ.) பட்டமும் பெற வேண்டும் என விழைந்து, முதன் முதலாக அப்பட்டம் பெற்றார். அதன் பின் பச்சையப்பன் கல்லூரியிலேயே தமிழ்ப் பேராசிரியராகவும் அமர்ந்தார். அக் காலத்தில் பட்டம் பெறும் அளவு படித்தவர்கள் வேறு அலுவலில் நுழைந்தால் பெரும் பொருளை ஊதியமாகப் பெற லாம். ஆயினும், தமிழையே பொருளாக மதித்துக் குறைந்த ஊதி யத்திலேயே அப் பணியில் ஈடுபட்டார். அவருடைய விரிந்த கல்வியும், ஆழ்ந்த அறிவும், தமிழ், ஆங்கிலம், மலையாள இலக் கியத் தேர்ச்சியும், பழமொழிகளைக் கையாளும் திறனும், நகைச் சுவை விரவிய பேச்சும், தாய்மொழிப் பற்றும், மாணவர்கட்கு அவரிடம் மட்டுமேயன்றித் தமிழிடமும் மிகுந்த மதிப்பும், பற்றும் ஆர்வமும் பிறக்க ஏதுவாயின. அவர் அணி செய்த காலந் தொட்டே, பச்சையப்பன் கல்லூரி தமிழ்ப் புலமைக்குப் பெயர் பெற்று விளங்கலாயிற்று எனலாம். அண்மைக் காலத்தே புகழ் பெற்று விளங்கிய பேராசிரியர் சொல்லின் செல்வர் சேதுப் பிள்ளை அவர்களும், இன்றும் பெருமையொடு விளங்கும் பன் மொழிப் புலவர் மீனாட்சிசுந்தரனார் அவர்களும் செல்வகேசவ ராயரிடத்தே பயின்றவர்கள் என்பது அவர் பெருமைக்குச் சான் றாவதன்றோ! F தமிழ் மொழியிலே அவர் கொண்டிருந்த பற்று, தம் பிள்ளை களுக்கு அவர் இட்டு வழங்கிய பெயர்களாலேயே புலப்படும். சிறந்த புலமையுடையவராய், பழைய இலக்கண இலக்கியங் களுக்கு உரை உரை கண்டவர்களான, பரிமேலழகர், நச்சினார்க் கினியர், சேனாவரையர் ஆகியோர் பெயர்களையே தம் பிள்ளை களுக்கு வைத்து அழைப்பதிலே அவர் பெரு மகிழ்ச்சியுற்றார். அவரது காலத்தில் தமிழ் உரைநடை இலக்கியம் ஒரு வாற்றான் இடம் பெற்று வந்ததேயன்றிக் கவிதை நடை ஏடுகள் போன்று வளம்பெற்றுத் திகழவில்லை. கவிதை நடையிலே தான் புலமை சிறப்பது என்னுங் கருத்தால், நல்லறிவுத்