செல்வகேசவராயர் 127 கட் திறனுடையார் பலரும் ஆங்கிலத்திலே உரைநடையைக் கைக் கொள்ளினும் தமிழிலே விருத்தமும் வெண்பாவும் ஆசிரியமும் இயற்றுவதிலேயே ஆர்வமுடையவராய் வாழ்ந்தனர். டுரைகள், மேல்நாட்டு மொழிகளிலும், குறிப்பாக ஆங்கிலத் திலும் அமைந்தவாறு தமிழில் எழுதப்படுவதில்லை. தமிழ் உரை நடை பலரும் விரும்பிப் படித்தற்கும் பொருள் அறிந்து தெளிதற் கும் ஏற்ற கருவியாகக் கைக்கொள்ளப் படவில்லை. பழந்தமிழ் இலக்கணங்களுக்கும், இலக்கியங்கட்கும் பொருள்கண்ட பேராசிரியர்கள், ஏழு, எட்டு நூற்றாண்டுகட்கு முன்னரே உரைநடையைக் கையாண்டனர் எனினும், அவை புலமைச் செறிவுடைய அரிய நடையில் அமைந்தவை. பின்னர்ச் சமயச் சார்புடைய ஏடுகள் சிலவற்றுக்கு விரிவான விளக்கங்கள் (வியாக்கியானங்கள்) உரைநடையில் எழுதப்பட்டுள்ளன. அவையும் அனைவராலும் படிக்க முடியாதவை. பதினேழு பதினெட்டாவது நூற்றாண்டுகளிலேதான் கிறித்தவச் சமயக் கருத்தைப் பரப்புவதற்கு விழைந்த பாதிரி மார் பலர், இக்கால உரைநடைக்கு அடிகோலும் முறையில் பல உரைநடை ஏடுகளை எழுதி வெளியிட்டனர். வீரமா முனிவர் என்று பெயர் பெற்று விளங்கிய பெசுகி பாதிரியார் எழுதிய 'அவிவேக பூரண குரு' கதையே முதல் உரைநடை இலக்கியமாகும். பின்னர் வேறு சிலர் உரை நடை யில் எழுத முன்வந்தனர். எனினும் அவருள்ளும் பத்தொன் பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்திருந்த யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர் அவர்களும், வடலூர் இராமலிங்க வள்ள லாரும், நீதிபதி வேதநாயகம் பிள்ளை அவர்களும் முதன்மை யுடையோ ராவர். வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் கதை குறிப்பிடத் தகுந்த சிறப் புடையது. வள்ளலாரின் உரைநடை எளிதன்று. ஆறுமுக நாவலர் சைவ சமயச் சார்பில் நின்றே பல ஏடுகளையும் எழுதி வெளியிட்டாரெனினும் அவை கற்பார்க்கு ஏற்ற பெற்றி அமைந்து உரைநடைக்கு ஆக்கஞ் செய்தன. ஆயினும் அக் காலத்தில் பல்வேறு துறைக் கருத்துகளும் படிப்பார்க்கு
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/148
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
