128 தமிழ்க்கடல் அலை ஓசை ஆர்வமும் தெளிவும் பிறக்கும் வகையில் தமிழ் உரை நடையில் எழுதப் பெறவில்லை. இருபதாம் நூற்றாண்டில்தான் அந்நிலை அரும்பியது. செல்வகேசவராயர் அவர்கள் முதன் முதலாகப் பல்வேறு பொருள் குறித்தும் நல்ல தமிழ்ச் சொற்களையும் தெளிந்த நடையையும் மேற்கொண்டு கட்டுரைகள் வரையலானார். அவ் வாறு வரைந்த கட்டுரைகள், தமிழ் உரைநடை நூல்களாக வெளியிடப்பட்டு, மக்களிடையே தமிழ் அறிவும் நல்ல தமிழ் நடையும் வளர வழிசெய்தன. முதன் முதலாகத் தமிழ்ப் புலவர்களைக் குறித்தும், இலக் கியங்களில் காணப்படும் பாடல் கருத்துகளைக் குறித்தும், தமிழ் மொழியைக் குறித்தும் ஆராய்ந்து வெளியிட்ட தமிழ்ப் புலவரும் அவரே எனலாம். தம்முடைய ஆராய்ச்சியில் உண்மையென்று கண்டவற்றை அஞ்சாது உரைக்கும் ஆண்மையுடையவராயும் அவர் விளங்கினார். தமிழ்மொழி குறித்து அக்காலத்தில் நிலவிய தவறான கருத்துக்கள் பலவாகும். அவற்றை நீக்கும் வகையில் 'தமிழ்' என்னும் பெயரில் செல்வகேசவராயர் எழுதிய நூலில் காணப் படும் அரிய செய்திகள் பலவாகும். அவை அக்காலத்தில் தமிழர்கட்குத் தம்மொழி குறித்துப் புதிய உணர்ச்சி ஊட்ட ஏதுவாயின. 'தமிழரும் தெலுங்கரும், மலையாளிகளும் கன்னடரும் ஆகிய நால்வரும் புகைத் தேரிலே ஒருங்கு செல்ல நேர்ந்தால் ஒருவர் சொல்வதை ஒருவர் அறிவதில்லை. ஆயினும் இவர் தம் முதாதையர் அனைவரும் ஓரிடத்திலே வதிந்த ஒரே கூட்டத்தினர் எனக் கூறினால்,சிலர், 'இதுவும் ஒரு கலிகாலக் கூத்து' என நகுதல் செய்வர். எனினும் ஈதுண்மை என்பது மொழிநூல் உணர்ந்த பலருக்கும் அங்கைக் கனியாமன்றோ! இக் கூட்டத் தார் திராவிடர் என்னுங் குறியீடு பெறுவாராயினர். இவர் களுடைய மொழிகளும் 'திராவிடம்' என்னும் பிண்டப் பெயர் பெறுவனவாயின. தொல்லை நாள் தொட்டுப் பெற்றுள்ள தலைமையால், பிற திராவிட மொழிகள் தனி எழுத்து வடிவமும்
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/149
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
