xiv தமிழ்க்கடல் அலை ஓசை "யாழுங் குழலும் பல பறையும் யாழா ரொடு பாட ரங்கும் போழும் பனையே டுந் தோய்ந்த பொதி பொதியான தமிழ்தாலும் வாழும் பொருளும் நிலபுலமும் மனையோ டினவும் வாய்க் கொண்ட பாழுங் கடலே அதற் கோங் ஓல மிடு கின் றனையோ " என்பது கவிஞரின் உள்ளத்தில் எழுந்த ஓலமே ஆம். இதுவேயன்றி இடைக்காலத்தில் ஆரிய சாகரத் துக்கும் தமிழ் இரையாயிற்று. வடமொழி உயர்ந்தது, அதன் உறவும் கலப்பும் தமிழுக்கு ஆக்கம். சமக் கிருதம் தேவமொழி, தெய்வத் தன்மை கொண்டது. தமிழ் நீசமொழி - தாழ்ந்தோர் பேசும் மொழி- இழிந்த மொழி. இப்படிப்பட்ட எண்ணங்கள் உருவாகி, தமிழ் ஒதுக்கப்பட்ட மொழியாக, நாளும் தேயும் நிலைக்கு ஆளா யிற்று. தமிழ் இலக்கியம் போற்றுவாரற்றுக் கிடந்தது. தமிழ்மொழியின் வடிவு சிதைய வழி கோலப்பட்டது. தமிழில் மணிப்பிரவாள நடை தலைதூக்கலாயிற்று. செந்தமிழ் வழங்காத பகுதிகளில், வட மொழிக் கலப்பு புது மொழிகளை உருவாக்க ஏதுவாயிற்று. சிதைந்த தமிழே, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய புதுவடிவு பெற்று, தனித்தனி மொழிகளாயின. இவற்றின் மூலத் தொடர்பும், வேர்ச்சொற்கள் ஒற்றுமையும் காட்டியே இவை யாவும் திராவிட மொழிகள் என்னும் குழுப்பெயர் பெற்றன. ஆம், வைதிக வாடை வீச்சாகிய வடமொழித் தொடர்பு தமிழ் நிலவி இருந்த பரப்பிலும் அதைச் சிதைத்து விட்டது. யார் வைத்த கொள்ளியோ, 'தமிழ் வீடு' வெந்தது என்று ஏங்கிடவே வரலாறு ஏதுவா கின்றது.
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/15
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
