செல்வகேசவராயர் 129 வளர்ச்சியும் பெறு முன்னரே தமிழ் விளங்கி நின்ற தன்மையால், தமிழ் ஒன்றனையும் சிறப்பு வகையால் திராவிடம் என்றே தம்முள் வழங்குவாராயினர். வடமொழி வாணர்தம், மொழியில் 'திராவிடம் என்பது ஓடி வளைந்தது' என்னும் பொருளுடைய தாம். ஆகவே மேற்கூறிப் போந்தவர்கள், சென்று வளைந்து குடியேறியிருந்த தென்னாட்டினைத் திராவிட தேசம் என்றும், அவர்களைத் திராவிடர் என்றும், அவர்களுடைய மொழியைத் திராவிடம் என்றும், வடமொழியாளர் தம்முள் வழங்கலாயினர் என்பது வெளிப்படை. 'இனித் திராவிடம் என்னும் ஆரியமொழிச் சொல்லே தமிழ் என மரீஇயது (மருவியது) என்பார் கூற்றும் பலர்க்கு உடன்பாடாவதில்லை. திராவிடம் - த்ரவிடம் - த்ரமிடம் -- த்ர மிளம் - தமிழ் என, மரூஉவின் முறைகாட்டி மயக்கஞ் செய்கின்ற வர்களை நோக்கி, 'அற்றன்று; தமிழ் என்பதை உச்சரிக்க இய லாத ஆரியர்கள் தமிழை - தமிளம், த்ரமிளம், த்ரமிடம்,த்ர விடம், த்ராவிடம் என, தம் உச்சரிப்பு வகையால் மாற்றஞ் செய்வாராயினர்', என மறுத்து வாதுக்கழைப்பர். 'தமிழ்' என்னுந் தமிழ்ச் சொல், 'தண்டமிழ் யாழினுமினிய சொற்கிளியே' (கம்பர்) என வருவது போன்று இலக்கியத்தில் பலவிடங்களில் இனிமை என்னும் பொருட்டாய் இயங்கா நிற்ப வும், திராவிடம் என்னுஞ் சொல்லைத் தமிழ் என்னும் பெயர்ச் சொல்லோடு சம்பந்தமுடையதாய் மொழிவது, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிபோடுவதே யாகும். திராவிடம் என்பது வடநூல்களுள்ளும் பண்டைப் பனுவல் களில் காண்கிலாததோர் நலமொழி என்றே நன்குணர்ந்த புலவர்கள், பன்னெடுங்காலமாய் இங்கு நிலைபெற்றிருந்த 'தமிழைத்' திராவிடம் என்பதன் திரிபென்பது மலடி பெற்ற மகவு என்பதனை ஒக்கும்.' 77 இவ்வாறு தமிழ் என்னுஞ் சொல் தமிழகத்திலேயே தொன்று தொட்டு வழங்கிவரும் பெயர் என்று கூறும் ஆசிரியர் அதற்குச் சான்று காட்டினார். 8
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/150
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
