130 தமிழ்க்கடல் அலை ஓசை தொன்று தொட்டே 'தமிழ்' என்பது மரபுச் சொல்லாக வழங்கி வந்ததனாலன்றோ, ஆசிரிய மரபையே மரபாகக் கொள் ளும் மாண்புடைய தொல்காப்பியனாரும், தமது இலக்கண நூலில், 'தமிழென் கிளவியும்'— 'தமிழ்கூறு நல்லுலகம்'- 'செந் தமிழ் இயற்கை' என்பன போன்று, பலவிடத்தும் அதனை எடுத் தாண்டுள்ளார் என வினவி, இங்கு வடமொழி வாடை வீசு முன்னரே 'தமிழ்' என்னுங் கிளவி வழக்காறுடையதாக இருந் தது என்பது போதரும்" என முடிவு செய்துள்ளார். மேலும், "தமிழர்களுடைய நெடியதொரு தொன்மையை நோக்குங்கால் ஆரியர் இங்கே குடியேறிய காலம், கண நேரத் துக்கு முன் பெற்ற தந்திச் செய்தியை ஒக்கும்" என முன்னால் தமிழக ஆளுநராக இருந்த கிராண்ட்டப் என்பார் கூறிய கருத்தை அவர் சான்றாகக் காட்டியுள்ளார். அவர் காலத்தில், தமிழ்மொழி, வடமொழி வழிப்பிறந்த மொழி என்றும், கடவுள் அருளிய மொழி யென்றும் கூறுவதிலே பலரும் பெருமை கொண்டனர். அதன் குற்றத்தையும் குறையையும் உணர்ந்தாரில்லை. அவர்கள் அவ்வாறு கொள்ளு தற்கு எடுத்துக் காட்டிய பாடல்கள் பல. அவற்றை ஐயுறு தற்கும் அஞ்சினர் புலவர். ஆனால் செல்வகேசவராயர் அந்த அச்சத்தை விலக்கித் தாம் கண்ட உண்மையைத் துணிவுடன் உரைக்க முற்பட்டார். அவ்வாறு அவர் எழுதியது இது: "தமிழ்தான் ஆரியத்தின் வழி வந்ததன்றித் தன்னில் தானாயதோர் தனிமொழி அன்று என்று ஒருசார் புலவர்கள் தமிழ் நூல்களினின்றே சான்று காட்டுவார். அன்றியும் தமிழ் நூற்கு அளவிலை, அவற்றுள் ஒன்றே யாயினுந் தனித்தமிழ் அன்றியும் ஐந்தெழுத்தால் ஒரு பாடை டென்று அறையவே நாணுவர் அறிவுடை யோரே" என்ற இலக் கணக் கொத்தைக் காட்டினால் அலக்கண் உறுவேன். உண்டோ? · உண் "தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான்” என்று அகத்தியனாரைக் கூறும் இராமாயண அடியை ஓத எனக்கு நா எழுவதில்லை.
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/151
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
