பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வகேசவராயர் 181 "இரு மொழிக்கும் கண்ணுதலார் முதற் குரவர்" என்னும் விருத்தத்தின் ஏனைய அடிகளைக் கேட்க நாள் ஆற்றகில்லேன். "வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியை உலகமெலாந் தொழுதேத்தக் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர் என்பதைக் கண்டால் அம்மட்டிலே நான் அந்தப் புராணத்தை மூடிவிடு வேன். 'கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந்து ஆய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை மண்ணி டைச்சில விலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ! தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை உண்ட பாலனை யழைத்ததும் எலும்புபெண் ணுருவாக் கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித் தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்" என்ற திருவிளையாடலைப் படிப்பதுதான் எனக்குப் பெருவிளை யாடல்! (ஒருவாறு தமிழினைப் பெருமைப் படுத்தி யுரைப்பதால் இதனைப் படிப்பதிலே அவர் மகிழ்ந்துள்ளார் போலும்) 'செந் திறத்த தமிழோசை வடசொல்லாகி' என்பது ஒன்றுமே எனக் குப் பேரானந்தத்தை விளைவிப்பது. இவ்வாறு தமிழின் பெரு மைக்கு ஒவ்வாத எந்தக் கருத்தையும் அவர் ஏற்க மறுத்துப் புராணக் கருத்தைப் பொய்யாக்கினார். தமிழானது வடமொழிக்குத் தலைமகனென்றும், தமிழரும் ஆரியருடைய நாற்பாற் குலத்திற் கீழ்ப்பாற் குலத்தாரென்றும், காரணம் காட்டாது கண்முடிப் பேசுகின்றவர்களுடைய கோட் பாடுகளை வெட்டிப் பேசுவதற்கு முன்வந்தார். மேலும், சிவ பெருமான் பாணினி முனிவருக்கு வடமொழி இலக்கணமும், அகத்தியருக்குத் தமிழ் இலக்கணமும் அருளிச் செய்தார் என வும், சிவபெருமானின் உடுக்கையின் வல, இடப் பக்கங்களி னின்றும் எழுந்த ஓசைகளைக் கொண்டே அம்முனிவர்கள் வட, தென்மொழி இலக்கணங்களைச் செய்தார் எனவும், மேலெழுந்த