பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 தமிழ்க்கடல் அலை ஓசை தென்பாலைச் சமன் செய்து அடக்க வந்த அகத்தியர் அறுமுகக் கடவுளிடம் தமிழ் கற்றார் எனவும், வழங்கும் புராணக் கற்பிதக் கருத்துக்களை எடுத்துக் கூறி அவை அறிவுக்குப் பொருந்தா வெனக் கடிந்து ஒதுக்கியுள்ளார். "அகத்தியர் ஏதோ ஒரு காரணத்தினால் தென்னாட்டினை அடைந்தவர், தமிழ் வல்ல சான்றோரிடத்து அதனை ஓதி யுணர்ந்தார், என்பதே எமக்குத் துணிவு" என்றும் அறுதியிட்டுள்ளார். தமிழை அகத்தியர் தாமே படைத்தார் என்பது எவ்வாற்றானும் பொருந்தாது. ஒரு மொழியை ஒருவர் உண்டாக்கினார் என்பது மொழிநூல் முடிவுக்கு முற்றும் முரண்பாடாகும். அகத்தியர் தென்னாடடைவதற்கு முன்னரே அங்கே தமிழ் வழங்கியிருந்த தென்பதற்கும், அந் நாளில் அதனை வழங்கினோர் ஆரியரல்லாத வேறு இனத்தவர் பதற்கும், இராமாயணத்திலேயே சான்று உள்ள தெனவும் காட்டியுள்ளார். என்ப தமிழானது மிக்க சொல்வலிமையும், வடமொழிக்கு முற்றும் புறம்பான இலக்கிய வகையும் இலக்கண அமைதியும் உடைய தனிமொழியே என்று விளக்கி உரைத்துள்ளதோடு, தமிழில் வந்தேறிய நூல்களில் இடம் பெற்ற பிறமொழிச் சொற்களைப் பற்றியும் ஆராய்ந்து கூறியுள்ளார். வட மொழியினின்றும் தமிழில் வந்தேறிய சொற்கள் வட சொற்கள் எனவும், பிறமொழிகளினின்றும் வந்தடைந்து அருகி வழங்குபவை திசைச் சொற்கள் எனவும், குறிக்கப்படும். அவை தாமும் வாணிபத்தின் பொருட்டாகவும், பிற காரணங்களாலும் தமிழரும் பிறரும் விரவிய விடத்துத் தமிழிற் புகுவனவாயின. அவ்வாறு வழங்கும் போர்த்துகீசியச் சொற்கள் : கிராம்பு, சன்னல் (பலகணி), சாவி (திறவு கோல்), அலமாரி, பாதிரி முதலியன. பாரசீகச் சொற்கள் : ஜபீன் (பெருநிலக் கிழார்}, சிபார்சு (பரிந்துரை), சிப்பந்தி (பணியாள்), சிப்பாய் (வீரன்), சுமார் (ஏறக்குறைய), தஸ்தாவேஜு சான்றேடு), பந்தோ பஸ்து (காவல்), ரஸ்தா (சாலை), மேஜை, பக்கிரி முதலாயின. அராபியச் சொற்கள்: அலாக்கு, அனாமத்து, ஆசாமி, இரிசால், இலாக்கா, வாய்தா,நகல், நாசூக்கு,மாமூல், முனிசீப்,வசூல்,