செல்வகேசவராயர் 133 சொற்கள்: அசல் ஜப்தி, முதலாயின. இந்துஸ்தானிச் அந்தஸ்து, அலுவா, அம்பாரி, ஆஜர், இஸ்திரி, உஷார், கலாயி, குமஸ்தா, குல்லா, ஜமுக்காளம், ஜாபிதா, ஜல்தி, ஜோடு, தபால், தாணா, தர்பார், துப்பட்டா,நபர், பஞ்சாயத்து, பங்களா, பாரா, மாசூல், ஜவாப், சவாரி, சபாஷ், ஜவான் முதலாயின. இவை முதலாயின திசைச் சொற்கள் பலவும் நூல் வழக் கில் இடம் பெற்றவையாகா. பேச்சு வழக்கிலே வழங்குபவையே மிகுதி. நூல் வழக்கில் ஏறியிருக்கும் அளவையும் அவர் கணக் கிட்டு உரைத்திருப்பது அறிய வேண்டியதொன்றாகும். ஈரா ஆத்திசூடி முதலான நீதிநூல்களில் வருகின்ற யிரத்து இருபது சொற்களுள் வடசொல்லாவன நூற்றைம்பத் தாறு. இது நூற்றுக்கு எட்டு வீதமும் ஆகவில்லை. நறுந் தொகையில் [வெற்றி வேற்கை) அறுநூறு சொற்களுள் இருபானான்கு வடசொற்கள் அமைந்துள்ளன. இது நூற்றுக்கு நான்கே ஆகிறது. நைடதம் வடமொழியினின்றும் மொழி பெயர்க்கப்பட்ட நூலாயினும், அதனுள் சராசரியில் மூன்று பாட்டில் இரண்டு வடசொல்லின் மிகுவது அருமை. திரி கடுகத்தில் இருபத்தைந்து வடசொற்கள் உள்ளன. இது நான்கு வெண்பாவிற்கு ஒரு வடசொல் ஆகின்றது. நான்மணிக் கடிகை முற்றும் தடவிப் பார்த்ததில் இருபது வடசொல் கண் டோம். திருக்குறளில் ஓரோ வோரதிகாரத்து இரண்டும் ஒவ் வொன்றில் ஒன்றுதானும் காண்பதரிதாய் இராநின்றது. நாலடியில் ஐந்து வெண்பாவில் ஒரு வடசொல் காண்பது கடின மாக இருந்தது. கலித்தொகையில் கலிப்பாட்டு ஒவ்வொன்றி லும் வடசொல் ஒன்றின் மிக்கிலது. கல்லாடத்தில் அகவல் ஒன்றில் ஐந்தின் மிக்க வடசொல் இல்லை. பத்துப்பாட்டைப் பதமுறச் சுவைத்த விடத்து, பற்பானூறும் சிற்சினூறுமாய வரிகள் கொண்ட பாட்டு ஒவ்வொன்றிலும் வடசொற்கள் நான் கைந்தின் மிகவில்லை. அவை தாமும் வடசொல்லோ தமிழ்ச் சொல்லேயோ என ஐயம் கொள்ளுதற்கு ஏதுவாக நின்றன. சைவ, வைணவ சமய நூல்களாகும் திருவாசகம்,தேவாரம்,
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/154
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
