பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தமிழ்க்கடல் அலை ஓசை நாலாயிரப்பிரபந்தம் முதலியவற்றில் மேலே காட்டின அள விலும் வடசொற்கள் மிக்குள்ளன. இன்னும் சோதிடம் முதலியவற்றை நோக்குமிடத்து வடசொற்கள் பின்னும் பல வாம். இவ்வாறு கணக்கிட்டுக் காணுமிடத்துக் காலத்தால் பின்னே போகப் போகத் தொன்மையான இலக்கியங்களில் அம் மொழிக்கலப்புக் குறைந்துகொண்டே போகின்றது என் பதும், அதனால் தன்னால் இயன்ற தனித் தமிழ் ஒரு காலத்து உள தாயிருந்தது என்பதும் பட்டம் பகலாகத் திட்டப்படுகின்றது. என்பது அவர் தந்த ஆய்வுரை. இன்றளவும் வழங்கும் தமிழை மேனோக்காகக் காண்ப வரும் அதன் சொற்களின் தனித் தன்மையைக் காணலாம்" என்பார், எடுத்துக் காட்டி விளக்குவது இது: 'உழவும் கலப்பையும், காரும் கயிறும், குண்டையும் நுகமும், சாலும் வயலும், வாய்க்காலும் ஏரியும், மடுவும் ஏற்றமும் பிறவும், பயிரும் களையும், நட்டலும் கட்டலும், முதலாய ஏரெழுபதும் தமிழ் மொழிகளான் இயன்றனவே. தமிழர்கள் வதியும் வீடுகளின் கூறுகளாகிய தலைக்கிடையும், புழைக்கடையும், கூரையும் வாரையும், கூடமும் மாடமும், தூக்கும் தூணும், கல்லும் கதவும், திண்ணையும் குறடும் தரையும் சுவரும், மண்ணும் மானும், மற்றவுந் தமிழே. தலையும் காலும், கண்ணும் காதும், மூக்கும் மூஞ்சியும். வயிறும் மார்பும், நகமும் சதையும், நாவும் வாயும், பல்லும் மயிரும் மற்றவும் ஆகி கிய உடற் கூற்று மொழிகள் தனித் தமிழன்றே! தமிழ்நாட்டிலுள்ள சிற்றூர், சீரூர், ஆரூர், பேரூர், புத்தூர், புற்றூர், சேய்ஞ்ஞலூர்; மணலி, நெல்லூர், நெல்லை, கொன்னூர், குறட்டூர் என்னும் ஊர்கள் பலப் பல தமிழ்மொழியே புனைந்தன. ஞாயிறுந் திங்களும், செவ்வாயும் வியாழமும், வெள்ளியும் ஆகின்ற கிழமை கட்குத் தமிழ்ப்பெயர் பெயரே. தொண்ணூற்றொன்பதினா யிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற் றொன்பதுவரையில் எண்ணப்பட்ட எண்களில் ஒன்றேனும் வடமொழியால் எண்ணப் படுவதில்லை. ஆழாக்கு, உழக்கு, நாழி, குறுணி, பதக்கு தூணி, கலன் என்னும் முகத்தலளவையும், இன்னும் கீழ் வாயிலக்கமும் அவற்றின் குறியீடுகளும் எல்லாம் தமிழே.