செல்வகேசவராயர் 185. தமிழர்கள் உண்ணும் சோறும் சாறும், காயும் கறியும், பாலும் பழமும், நெய்யும் தயிரும், உப்புமுதல் ஒன்பதும் பருப்பு முதல் பத்தும், தமிழ்ச் சுவையே. எழுத்தும் சொல்லும், பொருளும் யாப்பும், அணியும் ஆகிய ஏடுஞ் சுவடியும், எடுத்துப் பார்க்கு மிடமெல்லாம் தமிழே. துணியும் அணியுந் தமிழே. தொழும் கடவுளும் தமிழ் மயமே. வீடும் நாடும், காடும் மேடும் ஆகிய எங்கும் தமிழ் மயமாகவே இருக்கின்றது. தமிழின் தனிப் பிறப்பை ஏற்க மறுப்பாரும் இருந்தமையன்றே வியப்பு ! மேலும், தமிழின் தொன்மையுணராத வடமொழி வலவர் சிலர் என்ன ஐயா,தமிழ்! தமிழ்!! எனப் பெருமலைவு செய் கின்றீர்? உங்கட்கு வடமொழி தழுவாத இலக்கியம் உண்டா? காவியங்கள் உண்டா? நாடகம், சங்கீதம் உண்டா தருக்கம் வேதாந்தம் முதலான சாத்திரங்கள் உண்டா? உங்கள் தமிழைக் கட்டிவையுங்கள். எல்லாம் நாங்கள் உமிழ்ந்த சக்கை தானே !' எனக் கூறிப் பெருமிதம் எய்துகின்றனர். 'இவ் வட மொழி வலவரோடு எதிர்த் தட்டாக நிற்பது தமிழ்ப் புலவர் களுக்குச் சிங்க சொப்பனமாக இருக்கிறது' என்று தொடங்கி, தமிழின் தனிப் பெருமைக்குரிய சான்றுகளைக் காட்டி எதிர் வழக்காடியுள்ளார். அவ்வாறு அவர் கூறியனவற்றுள் சில இவை: முதலிடைச் சங்கமிருந்த மதுரையுங் கபாடபுரமும் கடல் கொள்ளப்பட்ட ஞான்று, வழி வழிப் பெயரு மாள, வாரணம் (கடல்) வாரிக் கொண்ட ஏரணம், உருவம் யோகம், இசை, கணக்கு... நீர், நிலம், உலோகம், ஆரணம், பொருள் என்று இன்னபிற நூல் யாவும் போக; இராமபாணங்கள் துளைத்துச் செல்லரித்தும், உக்குதல், மக்குதலானும் ஒழிந்த நூல்கள் பலவும் நீங்க; இந்நாள்காறும் எஞ்சி நின்றனவற்றை (1900ஆம் ஆண்டில் காணக் கிடைத்தவற்றை) ஒரு சார் ஆராய்வோம்' என விளக்க முற்பட்டார். பண்டை 1 திருவள்ளுவப் பயன் என்பது திருக்குறள். இதனைப் பரிமேலழகர் பாயிரத்தும் பிறவிடங்களிலும் முடிந்து காட்டிய முடிபு கொண்டு இது வடநூன் முடிபும் போக்குமாக முடிந்த தென்பது நமக்கு உடன்பாடாவதில்லை. புறப்பொருள், அகப் பொருள்களின் பிரிவாகிய அறம், பொருள்,இன்பம் என்ப
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/156
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
