பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 தமிழ்க்கடல் அலை ஓசை தொரு வரையறையை அடியாகக் கொண்டு, வள்ளுவனார், மன்பதைகள் உய்ந்துபோம் ஆற்றைத் (வாழும் நல்வழியை) தமது கருத்தில் செப்பமாகச் சீர் செய்தவாறே, இந்நூல் கூறினார் என்பதே பொருந்தும். வள்ளுவ மாலையின் நோக்க மும் இதுவேயா மென்பது கண்டு தெளிக!' என்று தெளிவு படுத்தினார். 'வடமொழியில் வான்மீகி இயற்றிய இராமாயணத்தை வட மொழி வல்லவர் உரைப்பச் செவியேற்றுக் கம்பநாடர் தாம் வேண்டியவாறு இராமாயணம் கூறினாரல்லது, சொல் தோறும், செய்யுள் தோறும் கட்டுண்டு, மொழிபெயர்த்துக் கூறினார் அல்லர். பாரத வெண்பாவும் இங்ஙனமே பெருந்தேவனாரால் செய்யப்பட்டது' எனவும் விளக்கியுள்ளார். 'தகடூர் யாத்திரை - சிலப்பதிகாரம் முதலியன உரைநடை யிட்ட பாட்டுடைச் செய்யுட்களாகத் தமிழிலேயே மலர்ந்தவை. உரை நடையும் தமிழர்கள் அறியாத தொன்றன்று' எனவும், 'பத்துப் பாட்டெனும் பாட்டுகள் பத்தும் தமிழ்நாட்டின் ஐந்திணை வளங்களையும், குடிகளின் நிலைமைகளையும் அற்றை நாளரசர் பெருமைகளையும் பலவற்றையுங் கூறும். நற்றிணை நானூறு முதலிய எட்டுத் தொகையும் தமிழுக்கே உரிய அகப் பொருள்களைப் பல வகையான் விரித்தியம்புகின்றன. ஆசாரக் கோவை ஒழிந்த ஏனைக் கீழ்க் கணக்கெல்லாம் அகப் புறப் பொருளான உலகிய னெறியும் வீட்டு நெறியும் கூறும் தமிழ் இலக்கியங்களாம்..... கல்லாடம் தமிழுக்கே உரியது. முத் தொள்ளாயிரம் என்பதும் தமிழரசரைப் புனைந்துரைத்த நூலே. கலிங்கத்துப் பரணி, மூவருலா, மடல் முதலியன தமிழே. சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியனவும் தமிழ்நாட்டு நிகழ் பொருளையும் சரிதங்களையும் புனைந்துரை வகையால் தொடுத்த பொருட்டொடர் நிலைச் செய்யுள்களாம். ஆத்திசூடி முதலியன தமிழுக்கான இலக்கியங்களே. மருத்துவ நூல்கள் பலவும் மொழி பெயர்ப்பு ஆவனவல்ல' எனவும் அறிவித்துத் தமிழின் முதன்மையை நிலைநிறுத்தி யுள்ளார். மேலும், 'சமயத்துறை இலக்கியங்களான, நாலாயிரப் பிரபந்தமும், சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் வடமொழியினின்றும்