பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வகேசவராயர் 137 மொழி பெயர்க்கப்பெற்றனவென்று கூறுதற்குச் சான்றுண்டா?' எனவும் வினவுகின்றார். 'நாடக நூல்களும் இசை நூல்களும் இறந்து போயின. இவற்றின் பண்டை நிலைமையை அறிய அவாவுறுகின்றவர்கள் சிலப்பதிகார உரையைக் கண்டு தெளிவாராக. இப்பொழுது நாமறிவன வெல்லாம் அக்காலத்துச் சங்கப் புலவர்கள் இயற் றிய பரதம், அகத்தியம், முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம், மதிவாணனார் நாடகத் தமிழ்நூல், கூத்தநூல் என்றாற்போன்ற நூல்களின் பெயர்களேயாம்' என்று மறைந்த தமிழ்க் கலைச் செல்வத்தைக் குறித்து இரங்குகின்றார். மேலும், 'தமிழ் இலக்கணம் வடமொழியின் வழிப்பட்டதோ அன்றோ என்பதை இனித் துணிதல் வேண்டும் எனத் தொடங்கி, இருமொழிப் புலமையும் ஆராய்ச்சித் தெளிவும் மிக்க சிவஞான முனிவரது கருத்துகளைச் சான்றாகக் காட்டித் தமிழ் இலக்கணம் தனிவேரும், அடியும், கிளையுந் தழையுங் கொண்டது என்பதனை விளக்கி உரைத்தார். இத்துணைச் சான்றுகள் காட்டியும், இன்னும் தமிழை இழித்துக் கூறி அபசாரப்பட்டு (குற்றமிழைத்து) அழிகின்றோர் உளரேல், நாம் அவரை, நக்கீரனார் பாடியது போன்று 'ஆனந்தஞ் சேர்க சுவாகா' என்பதோடு நிறுத்திச் சாகப்பாடா மல், 'அவர்கள் தாமே எரிவாய் நிரயத்து வீழ்வர் கொல்' எனப் பரிந்து, செந்தமிழே தீர்க்க சுவாகா' என முடித்துக் கூ. கூறி அவரை வாழ்விப்போம் எனக் கூறியுள்ளார். தமிழ்ப்பகை பாராட்டுவோர் தாமே அழிவர் என்பதை அறிவுறுத்தி, தமிழ்ப் பெருமையை அவரும் உணர்ந்து வாழ்வுபெற வழிகாட்டுவோம் எனப் பேராசிரியர் செல்வகேசவராயர் கூறியது அவரது தமிழ்ப் பற்றையும் - தமிழ் வாழும் நெஞ்சத்தையும் ஒருங்கே காட்டுவ தாம். உரை நடை நூல்கள் பல இயற்றித் தானான தமிழின் தனிச் சிறப்பை நிறுவி, தமிழ்ப் புலவர்கள் நெஞ்சுயர்த்த வழி செய்த செல்வகேசவராயர் நினைவு போற்றப்பட வேண்டிய தன்றோ!