பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த்திருநாள் கண்ட நமசிவாயனார் பொங்குக பொங்கல் பொங்குக எங்கணும் பொங்குக பொங்கல் இன்பமே எய்துக. "பொங்கற் புதுநாள் போந்தது போந்தது எங்கணும் எவர்க்கும் இன்பமே எய்துக ! பொங்குக பொங்கல், பொங்குக பொங்கல்! பொங்குக பொங்குக பொங்கும் பாலும்! ஒக்கலும் மக்களும் உவந்துடன் உண்க! மக்கள் அனைவரும் மகிழ்ந்தே உண்க ! புத்துடை உடுமின் புத்தணி அணிமின்! பத்தி கொண்டே பரமனைப் பணிமின்!