என்று பணிந்துரை கத்துகடல் நீராலும் கயவ ராலும் கனலாலும் கண் கலந்த தூக்கத்தாலும் எத்தனையோ நூற்களை நாம் இழந்து விட்டோம் இல்லையெனில் ஒரு நூலா-இரண்டு நூலா பத்திரண்டா யிரங்கோடி நூற்களன்றோ பைந்தமிழர் கைவசத்தில் இருந்தி ருக்கும் / XV உவமைக் கவிஞர் சுரதா புலம்புவது தமிழ்ச் செல்வத்தை நாம் இழந்த வகையைச் சித்தரிப்பதன்றோ! ஆம்! இந்த நிலைக்காளான 'தமிழை' உயர்த்த தமிழ் மாட்சியைப் புலப்படுத்த, வடமொழி மயக்கறுக்க, வழிகாட்டிய அறிஞர் பெருமக்கள் பலராவர். தமிழ்ப்பற்று மிகக் கொண்டு - தமிழ் உணர்வும் தமிழ் ஆர்வமும் நம்மிடையே தழைக்க, தமிழின் தன்னிகரற்ற தனித் தன்மையையும் தகுதியையும் உலகோர் உணர வழிகண்ட உத்தமர்கள் அவர்கள். - - தாழ்த்தி வைக்கப்பட்டிருந்த தமிழ்- தலை நிமிரக் காரணமான உண்மைகளை ஆராய்ந்து அறிவுறுத்திய, ஆராய்ச்சியாளர்களை நாம் அறிந்து போற்றக் கடமைப் பட்டவர்களன்றோ! அந்தக் கடமை உணர்வே 'தமிழ்க் கடல் அலை ஓசை என்னும் இந்தக் கட்டுரைகளை எழுதத் தூண்டு கோலாயிற்று. தமிழ்மொழி இலக்கியக் கடலிலிருந்து கிளம்பும் உணர்ச்சி அலைகளில் இருந்து எழும் ஓசையே இது வாகும். தமிழ்க்கடல் எனத்தகும் அறிஞர் தம் உள்ளத்துப் பிறந்த உணர்ச்சி அலைகள் எழுப்பிய முழக்கம் எனினும் பொருந்தும்! தமிழ்க் கலை இலக்கியச் செல்வங்களை விழுங்கிய கடலிலிருந்து எழும் அலைகள் எழுப்பிய ஓசை,
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/16
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
