பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த்திருநாள் கண்ட நமசிவாயனார் தந்தம் தமிழ்மொழி நலம்பெற் றோங்கிட எந்தக் காலும் இன்புற வாழ்த்துக ! தண்கடற் பரப்பிற் சாரும் மணலினும் பண்புற வானில் பரவும் மீனினும் வாழ்க அனைவரும் வாழ்க பல்லாண்டு ! வாழ்க பல்லாண்டு வளமெலாம் படைத்தே ! 199) முதன்முதலாகப் பொங்கல் விழாவைத் தமிழ்த் திரு நாளாகக் கொண்டாடத் தலைப்பட்ட தமிழ்ப் பேராசிரியர் கா. நமசிவாயனார் வழங்கிய திருநாள் வாழ்த்து இதுவாகும். இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்மக்கள் வாழ்வு. தமிழர் என்னும் உணர்வற்றுத் தட்டுத் தடுமாறி நின்றது. தமிழ் மரபு, தமிழர் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு என்பவை குறித்துத் தெளிவின்றி நிலை கெட்டு நின்றனர் தமிழர். தமிழ் கற்ற புலவர்களிலேயே பலர், சமயச் சார்பால் கருத்துக் குழம் பிக் கிடந்தனர் எனில் மக்களைப்பற்றிக் கூறவாவேண்டும்? தமிழ் கற்றார் சிலர், கற்றாருள்ளும் தெளிந்தார் மிகச் சிலர், அவருள் ளும் தெளிந்ததனை வெளியிடும் துணிவுடையாரோ அரியர். அந்நிலையைத் தெளிந்தார் நமசிவாயனர். மக்களிடையே விளங்கிய பல்வேறு விழாக்களும், சில நம்பிக்கைகளையும் சமயச் சார்பான கதைகளையும் வடமொழிவழி எழுந்த வழக்குகளையும் ஒட்டியே கைக்கொள்ளப்பட்டன வாதலையும், பொங்கல் விழா ஒன்றுமே தமிழர் மரபொடு பொருந்தியும், இயற்கை நெறி யோடும் உழவுத் தொழிலோடும் வேளாண்மைப் பண்போடும் விழாச் சூழலோடும் விளங்கியும், சமய வேற்றுமை கடந்து தமிழர் யாவர்க்கும் உரியதாயும் அமைதலைக் கண்டறிந்தார். வாழ்கின்ற தமிழ்மக்கள் எல்லோரும், தாய்மொழிப் பற்றும் தமிழ் மொழித் தெளிவும் கொள்ளுதற்கு இத்திருநாளே ஏற்ற நன்னாள் எனக் கொண்டார். - பண்டைத் தமிழரின் பெருவாழ்வை - சங்கத் தமிழ் இலக் கிய மாட்சியை தமிழர்கள் பயின்ற கூத்தை - இத் திருநாளில் விளக்கி யுரைத்தும், பாடிக் கேட்டும், ஆடிக் கண்டும் மக்கள் அறிந்து மகிழ வேண்டும் என்று விரும்பினார்.