140 தமிழ்க்கடல் அலை ஓசை அதன் பயனாகவே, பழந் தமிழ்ப்பொங்கல் விழா, உழவரும் பிறரும் மகிழ்ந்த கொண்டாட்டம், முத்தமிழ் முழங்கும் தமிழ்த் திருநாளாய் வண்ணங் கொண்டது. நமசிவாயனார் துவக்கி வைத்த தமிழ்த் திருநாளே, தென்னவர் எழுச்சிக்கு உரமூட்டும் திராவிடர் திருநாளாகவும் கொண்டாடப் படுவதாயிற்று. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், மக்களிடையே தமிழ்ப் பற்று இல்லை. மாணவரிடையே தமிழ் கற்கும் ஆர்வம் இல்லை. அறுநீர்க் குளத்தில் ஆம்பல் பூக்குமோ? காயும் வெயில் எரிக்கையில் அல்லிதான் மலருமோ? தமிழகத்தின் தலையாய பல்கலைக் கழகத்திலும் ஒரு வட்டாரப் பேச்சு மொழி என்னும் பெயருடன், செந்தமிழ் ஓர் ஒதுக்கிடத்தில் தான் நிறுத்தப்பட்டிருந்தது. தமிழர்கள் தமிழ் நூல்களைக் கற்றுத் தமிழ்ப்புலமை எய்துதற்குப் பல்கலைக்கழகத் தேர்வு முறையி லேயே இடமில்லை. வடமொழியும் கற்றார்க்கே தமிழ்ப் புலமை உடையார் என்னும் தகுதி கிடைக்கும் என்னும் இடர்ப்பாடும் இழுக்கும் அடர்த்து நின்றன. பள்ளிச் சிறார் தம் வயதுக்கும் வகுப்புக்கும் ஏற்பக் கற்றற்கான நடையில் எழுதப்பட்ட ஏடு களும் இல்லாது தமிழ்த் துளிர்கள் கருகிக் கொண்டிருந்தன. அந்நிலையில் இந்தக் குறைகளைக் களைவதில் முன்னின்று, தமிழுக்குப் பல்லாற்றானும் தொண்டாற்றியவர் பேராசிரியர் நமசிவாயனார். தொண்டை மண்டலத்தில் உள்ள காவேரிப் பாக்கத்தில் 1876 ஆம் ஆண்டில் பிறந்து, இளமையிலேயே தமிழ்க் கல்வி கற்று, சென்னையில் ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து, பெரும்புலவர் (மகா வித்துவான்) சண்முகம் பிள்ளை என்பாரிடம் தம்மை மாணவராக ஆக்கிக்கொண்டு, தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கேட்டுத் தெளிந்தார். பின்னர் உயர்நிலைப் பள்ளிகள் சிலவற்றிலும், மேரி அரசியார் கல்லூரி யிலும் பேராசிரியராகப் பணியாற்றிப் புலமைத் திறத்தாலும், தமிழ் ஆர்வத்தாலும் தம்மிடம் பயின்ற மாணவ மாணவியர்க் குத் தமிழ் அமுதூட்டி, இலக்கியத் தேன் சுவை பயிற்றி, இளந் தமிழ் உள்ளங்களில் தமிழ் ஆர்வப் பயிர் தழைத்தோங்கச்
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/161
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
