பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த்திருநாள் கண்ட நமசிவாயனார் 141 செய்தார். அதுகாறும், தமிழ் மாணவர்கட்குத் தமிழ் வகுப்பு என்றாலே வேண்டப் படாத வேம்பாக, கசப்பு மருந்தாக இருந் தது போக, அவரது தமிழ் இனிமையால், அதுவே விரும்பிச் சுவைக்கும் கரும்பாக, இனிப்புக் கட்டியாக மாற்றங் கொண்டது என்றால் மிகையாகாது. அக்காலப் புலவர்கள் சமய நோக்கத்துடனேயே தமிழ் ஏடுகளைப் பயின்றதன் பயனாக, அவர்களிடையே சமய வேற் றுமை தலைதூக்கி நின்றது. சாதி பற்றிய மூட நம்பிக்கை யானும் வெறுப்பு வளர்ந்தது. இவற்றால் பிறந்த சண்டைகளும், தாக்குதல்களும் பலப்பலவாகலின், புலவரிடையே ஒற்றுமையும் புலமையிலே மொழிப் பற்றும் அரிதாயின. அவர்களால் தமிழ் தழைத்து வளரத்தான் கூடுமோ? நமசிவாயனாரோ, தம்முடைய ஆசிரியரான பெரும்புலவர் சண்முகனாரிடம் கற்கப் புகுந்த. காலத்திலேயே, தாம் சமயச் சண்டையிலும், சாதிப் பிணக்கு களிலும் ஒருநாளும் தலையிடாதிருப்பதாக, அவர் விதித்த கட் டளையை உளமார ஏற்றிருந்தார். பின்னாள்களில் அவரது எண்ணமும் செயலும் பொது நோக்குடையனவாகச் சிறக்க. அஃது ஏதுவாயிற்று எனலாம். அவர் சைவந் தழுவி நின்ற போதிலும், அவரது தமிழ்த் தொண்டு, ஒரு பக்கச் சார்புடையது ஆகாது, புலவர்களிடையே தமிழ் அடிப்படையினின்று எழும். பொது உணர்ச்சியும், ஒற்றுமையும் உருவாகத் துணையாயிற்று. தமிழ்ப் புலவர்கள் ஒன்று கூடுதற்கும், ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளுதற்கும் வாய்ப்பில்லாதிருந்த நிலையில் அவற் றிற்கு வாய்ப்பாக முதன் முதலாகப் புலவர் சங்கம் ஒன்று தோற்றுவிக்க முனைந்தார் அவர். சென்னைத் தமிழ்ப் பண்டித, சங்கம் பிறந்தது. புவர்கள் ஒன்று கூடி, உரையாடி மகிழக் கருத்து விருந்து நுகரத் தம் குறைகளை அரசினருக்கு எடுத்துக் கூறிக் களையுமாறு கேட்க, தமிழாசிரியர் தம் மதிப்பைக் கல்வித் துறையிலும் சமுதாயத்திலும் உயர்த்திக் கொள்ள இச் சங்கமே. உறுதுணையாயிற்று. அக்காலத்தில் உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றிய தமிழ் ஆசிரியர்கள் சிறந்த புலவர்களாயினும் குறைந்த ஊதியமே