பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 தமிழ்க்கடல் அலை ஓசை பெற்று வருந்தினர். நமசிவாயர், அரசாங்கத்தை வற்புறுத்தித் தமிழாசிரியர் தம் ஊதியத்தை உயர்த்தச் செய்தார். பேராசிரியர் 1917 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்மொழித் தேர்வுக் குழுவின் தலைவராகவும் 1920ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் தமிழ்க் கல்விக்குழுத் தலை வராகவும் அமர்ந்தார். அந்நாள்களில் பல்கலைக் கழகத்தில் வித்துவான் பட்டம் பெற விரும்பும் ஒரு தமிழ்மகன், தமிழேயன்றி வடமொழியிலும் தேர்ச்சி பெறவேண்டும் என விதி இருந்தது. வடமொழியை ஒதுக்கின் பிறிதொரு மொழியில் தேர்ச்சி பெறவேண்டும். அதன் பயனாகத் தமிழ் நாட்டில் வாழும் பிறமொழியாளர்கள் 'வித்து வான்' ஆதற்கு இருந்த எளிய வாய்ப்பு தமிழர்க்கு இல்லை. 'வித்துவான்' பட்டம் பெற்றவர்களும், அச் சொல்லின் வடிவுக் கேற்பப் பெரும்பாலும் வடமொழி பயின்றவர்களே ! வடமொழி யும் கற்றவர் என்று கூறுவது பொருந்தாது. தமிழும் கற்ற வர்கள் எளிதாகத் தமிழ் வித்துவான்கள் ஆனார்கள். உண்மை யான தமிழ்ப் புலமையுடையார் பலரும், 'வித்துவான்' பட்டம் பெறுதற்குக் கருதவே இடமில்லாத நிலை! என்னே தமிழ்த் தாயின் அவலம் இருந்தவாறு! நமசிவாயனார் கல்விக் குழுத் தலைவராக அமர்ந்த பின்னரே, பல்கலைக் கழகத்தில், தமிழ்ப் புலமையும் அமர்வ தாயிற்று. தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கு, இத் தேர்வு விதிகள் இடையூறாகும் வகையை அரசினருக்கு விளக்கிக் கூறி, வலி யுறுத்தி அதனை மாற்றுதற்கு இசைய வைத்தார். அதன் பயனாகவே தமிழ் இலக்கிய இலக்கண நூல்களை முறையாகக் கற்ற அளவில், வித்துவான் பட்டம் பெறலாகும் நீதி பிறந்தது. இக்காலத்தில் தமிழ்ப் புலமையுடையார் பலராகப் பெருகி வாழ் தற்கு வழியமைத்துத் தந்த பேரறிவாளர் அவரே. தமிழ்மொழி, காலத்தின் தேவையை நிறைவு செய்யும் வண்ணம் ஒவ்வொரு துறையிலும் சிறக்க வேண்டுமென விரும்பி அவர் ஆற்றிய பணிகள் பல.