பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த்திருநாள் கண்ட நமசிவாயனார் 149 பள்ளியில் அடியெடுத்து வைக்கும் குழந்தைகள் படித்தற்கு ஏற்ற 'சிறுவர் ஏடு' முதல் உயர்நிலைப் பள்ளி, கல்லூரி வகுப்புகள் முடிய ஒவ்வொரு நிலையிலும் வகுப்பிலும் உள்ள மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற, உற்ற பாட நூல்கள் வரை, ஆங்கில மொழி யில் அமைந்தவற்றிற்கு ஈடான பல ஏடுகளை எழுதினார் பேரா சிரியர். எளி தான சில சொற்களில் தொடங்கி, வளமான கருத்துச் செறிந்த செந்தமிழ்க் கட்டுரை வரையில் இயற்றி, தமிழ்க் கல்விப் பயிர் வேர்விட்டு வளர நீர் பாய்ச்சினார். கற்றார் பலரும் படித்தற்கு ஏற்ற நூல்களும் எழுதினார். நாடகத் துறையில் மேல் நாட்டு இலக்கிய வளர்ச்சியைக் கண்ணுற்ற அவர், சில நாடகங்களும் (கீசகன்; பிருதிவிராசன்) இயற்றினார். நல்ல தமிழ் நடை வளரவும் இலக்கியப் பயிற்சி செழிக்கவும், ஒரு திங்கள் ஏடு தேவை எனக் கண்டு 'நல்லாசிரி யன்' என்னும் இதழைத் தொடங்கிப் பதினைந்து ஆண்டுக் காலம் பயனுற நடத்திப் பலருக்கும் அத்துறையில் வழிகாட்டி யானார். பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிடுவதிலும் அவர் ஆர்வம் கொண்டார். இளம்பூரணர் உரையோடு, தொல்காப் பியத்தின் சொல் பொருள் அதிகாரங்களையும், இறையனார் களவியலையும் வேறு சில இலக்கியங்களையும் அவர் பதிப்பித் தார். அவரது தமிழ்ப் பணியின் அருமையும் பெருமையும் அவர் மறைந்த ஞான்று, தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்கள் உள்ளங் கரைந்து பாடிய இரங்கற்பாவின் அடிகள் சிலவற்றால் விளங்கும். அருந்தினை தமிழைப் பொருந்தி அமிழ்தென என்றும் இன்மொழி நன்றே வழங்கினை சாதியை யொழித்து நீதியில் நடந்தனை செந்தமிழ்த் தாயின் சிந்தை மகிழக் கால ஒப்பனை சாலச் செய்தனை