144 தமிழ்க்கடல் அலை ஓசை நின்மொழி யுன்ன தின் செயல் எண்ண உள்ளங் குழையும் ஊனுங் கரையும் என்பு நெக்குறும் அன்புக் கடலே பெரிதே துன்பம் பெரிதே காண்ப தென்றே மாண்புறு முகமே!? இவ்வாறு தமிழ்ப் பெரியார் உள்ளத்தில் இடம் பெற்ற- நமசிவாயர் தமது உள்ளத்தில் தமிழுக்குத் தந்திருந்த இடம் ம். தான் என்னே? 'தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே! தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே! ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே! உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே! வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே! மாந்தருக் கிருகணாய் வயங்குநன் மொழியே! தரணியில் சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே! தனித்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே!' தனித்தினிது ஓங்குவாய் எனத் தமிழை வாழ்த்தி, தமிழ் உணர்வு வளரும் வழி போற்றித் தமிழ்த் திருநாள் (விழா எங்ஙணும் தோற்றித் தமிழனாக வாழ்ந்த பேராசிரியர் நினைவு: தமிழொடும் வாழாதோ?
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/165
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
