பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த் தென்றல் இவ்விருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் மொழியின் நிலைதான் யாது? தமிழ் மக்களின் தாய்மொழிப் பற்று இடங் கொண்டிருந்த தன்மைதான் யாது? தமிழ் வழக்குந் தேய்ந்து, சொற்களும் உருக் குலைந்து, இசையும் திரிந்து தமிழ் அறிவும் மங்கித் தமிழர்கள் அடிமைகளாகவன்றோ நின்றனர். அந்த அடிமை நிலையினும் ஆங்கிலக் காதல் கொண்டு அதனைப் போற்றி வணங்குவோராய்த் தமிழை இகழ்ந்தன்றோ அலைந்தனர்! அக்காலத்தில் அவர் தம் சிறுமையை விளக்கி உண்மையைப் புலப்படுத்தி, உள்ளத்தைத் தொட்டு (உயிரோடு கலந்தது தாய்மொழியே' என்னும் 10