பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 தமிழ்க்கடல் அலை ஓசை உணர்வூட்டி, பல்வேறு துறைகளாலும், தமிழர்தம் நிலை உயர் வதற்கு உழைத்த உத்தமர் தமிழ்த்தென்றல் திரு. வி.க. அவர்களாவர். அவருடைய தமிழ்ப்பணியும் பொதுத் தொண்டும் பின்னிப் பிணைந்தவை. அவரது குரல் தமிழின் குரல்; அவரது செந்நா செந்தமிழ் நடமிடும் மேடை; அவரது எழுத்து பைந்தமிழ் பிறப்பிடம்; அவரது உள்ளம் தமிழ் அறச்சாலை; அவரது மூச்சு தமிழ் இலக்கியச் சோலையில் உலவி வரும் தென்றல்; அவரே தமிழ்! அவர் செயலெல்லாம் தமிழ்த் திருப்பணி. நாட்டு விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டு, மக்கள் மன்றத்திலே ஏற்றம் பெற்று மேடைகளிலே சிறப்புற்று ஏடுகளிலே புகழோங்கி அவர் வாழ்ந்த வாழ்வெல்லாம். பெற்ற பெருமையெல்லாம், தமிழுக்குக் கிடைத்த நல்வாழ்வாகவே அமைந்தது என்றால் அது தவறாகாது. அவர் ஆசிரியராக இருந்து மாணவரிடையே நல்ல தமிழ்ப் பயிர் வளர்த்தார். அரசியலில் ஈடுபட்டு நாட்டுப் பற்றோடு மொழிப்பற்றை இரண்டறக் கலக்கச் செய்தார். தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபட்டு அவர்தம் உரிமைக்குத் 'தமிழ் நெஞ்சம்' துணையாவதை விளக்கினார். பெண்ணின் பெருமைக்குத் தமிழ் இலக்கியம் அரண், தீண்டாமை ஒழிப்புக்குத் தமிழ் அறமே போர்க் கருவி என அவர் எடுத்துக் காட்டினார், அவரை. ஆசிரியராகப் பெற்றிருந்த ஏடுகள், தமிழ்மொழியைக் கையாளும் திறத்தால் பிற ஏடுகளுக்கெல்லாம் வழிகாட்டி களாயின. தமிழின் இளிமையை, பொருள் தெளிவை, கருத்து ஆழத்தை, செஞ்சொல் வளத்தை, இலக்கியப் பின்னணியை, பண்பட்டிருந்த அறவழியை, அவரது பேச்சும் எழுத்தும் உலகிற்கு உணர்த்தின. பழந்தமிழ் புதுத் தமிழாயிற்று அவரால்1 எண்ணற்ற தமிழர் - தமிழார்வம் கொள்ளத் துணையானார் அவர். செந்தமிழ் நாவீறு தோன்ற இனிய தமிழை மேடையேறி முழங்கி நாட்டுமக்களின் செவிகளிலெல்லாம் நல்ல தமிழை