தமிழ்த் தென்றல் 147 நிரப்பி - நற்றமிழ்ச் சொற்களெல்லாம் வழக்காறு பெற வழி செய்தவர் தமிழ்ப் பெரியார். அவரது மேடைப் பேச்சு நாட்டில் வழங்கிய மேடைப் பேச்சு முறையையே திருத்தமுறச் செய்யும் கருவியாயிற்று. எழுத்திலும் பேச்சிலும் திருந்திய செந்தமிழ் நடையையே கைக் கொண்ட திரு.வி.க. அவர்கள் அந்த நடை படிப் பவர்க்கு விளங்குமாறே, கேட்பவர்க்கும் விளங்குதல் வேண்டித் தமது கருத்துகளைச் சிறுசிறு சொற்றொடராக, எடுத்த தொரு கருத்தை முடித்து, அடுத்த கருத்தைத் தொடங்கும் ஒரு முறையை மேற்கொண்டு எளிதாக விளங்கவைத்தார். ஆம்! அவர் தம் கொள்கையை விளக்கி உரைநிகழ்த்திய அதே பொழுதில், செந்தமிழ் வகுப்பும் நடத்தினார். பிணிக்கத் தவருத அவரது பேச்சுக்கு, மாணவராயினார் பல்லா யிரவர். கேட்டாரைப் அவரது எழுத்தோ ஒரு கலைக்கூடம். அதில் இடம் பெறாத பொருளில்லை; உலகமும் மனித வாழ்வும் பல்வேறு கோணங்களில் 'படம்' பிடித்துக் காட்டப்படும். வாய் விட்டுப் படிப்பவர்க்கு, அதன் ஓசைநலம் இறும்பூது விளைவிக்கும். அவர் பலகாலும் எண்ணி எண்ணி ஆய்ந்து ஆய்ந்து சிந்தித்துத் தெளிந்து வெளியிட்ட நூல்கள் ஒரு சிறு நூல் நிலையமாகும். அவையே, அவரது உயிருடன் உறைந்து, ததும்பி நின்ற உணர்வின், இன்றைய உடலாக உள்ளன. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ் நடையின் தந்தை அவர். உரைநடையில் மட்டுமன்றிச் செய்யுள் நடை யிலும் அவர் இயற்றிய நூல்கள் பல துறை பற்றியவை. நூல் இயற்றுவதும் அவருக்கு ஒரு தொண்டு; தொழிலல்ல. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே' என்னும் நூலின், முன்னுரை யில், "என் தாய் நாடு உரிமை பெற்றாலன்றி, என் தமிழ்த் தாய், அரசு போற்றுங் கழகமேறி அரியாசனம் வீற்றிருக்க மாட்டாள் என்றும், சிறப்பாக அரசியல் துறை நண்ணிப் பணி செய்தால் தமிழ்த்தாய்க்கு நலம் விளையும் என்றும் எண்ணி, அத் துறையில் இறங்கித் தொண்டு செய்யலானேன் என்று
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/168
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
