xvi தமிழ்க்கடல் அலை ஓசை உணர்வார்க்கு உணர்த்தும் உண்மைகள் என்ற கருதிலும் தவறல்ல! இந்த ஏட்டினில் காணப்படும் அறிஞர் பெருமக்கள் கால் வரிசையில் இடம் பெறவில்லை. மாறாகத் தமிழ் மக்களின் உள்ளத்தில் தமிழ் வீறு பிறக்கவும், தமிழ்ப் பெருமை நிலைக்கவும், உண்மை கண்டு துணிவு கொள்ளவும் அவர்தம் கருத்துகள் துணையாகும் வகை G நோக்கி,வரிசைப் படுத்தப் பட்டுள்ளன எனலாம். முத்தமிழாம் இயல் இசை நாடக மறுமலர்ச்சிக்கும், உரைநடை வளர்ச்சிக்கும், ஆட்சி மொழி ஏற்றத்துக்கும் வழிகண்ட பெருமக்கள் மேலும் பலராவர். தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாலும், நாடு, இன, மொழி வரலாற்று ஆராய்ச்சியாலும் உறுதுணையானோரும் பலர். அவரெல் லாம் நம் போற்று தலுக்குரியோராவர். - " கடந்த நாற்பது ஆண்டு காலத் தமிழக வரலாற்றில் தனி இடம் பெறுபவரும், தமிழ் தமிழன் என்னும் உணர்வு தழைக்கவும், எழுச்சி பொங்கவும் பெரிதும் வழி கண்ட பெருமக்களுமான, பகுத்தறிவு இயக்கத் தந்தை பெரியார் அவர்களும்,தமிழ் இனத் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களும், தமிழ் இயக்கக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும்- தனித்தனி போற்றுதலுக்கு உரியோர் ஆவர். அவர்கள் தம் அருமையையும் பெருமை யையும் நாடு நன்கறியும். அவ்வாறு மக்களால் நினைவில் நிறுத்தப்படாத பெருமக்கள் பலர் இந்த ஏட்டில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் வழங்கியுள்ள அரிய கருத்து களைக் காண்போர்--அவற்றின் சிறப்பினையும் பயனையும் உணர்ந்து அவர்களை நாளும் போற்றுவர் என்பதே என் எண்ணம்.
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/17
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
