தமிழ்த் தென்றல் போது விளைந்த புத்துணர்ச்சியை 149 அந்தத் தென்றலிலே தோய்ந்தவர்கள் எய்தாதிருக்கக் கூடுமோ? அக்காலத்தில் தமிழ்மொழி உற்றிருந்த நிலையைத் தமிழ்ப் பெரியாரே விளக்கிக் கூறுவதைக் கேளுங்கள்! தமிழ்த் தென்றலிலே தோய்ந்து நிற்போம் நாம். "அருமைத் தமிழ் மாணாக்கர்களே! உங்கள் நாட்டை நோக்குங்கள்! அஃது எப்படி இருக்கிறது? அருமைத் தமிழ் நாடு சின்னா பின்னமாகக் கிடக்கிறது. காரணம் என்னை? தலையாய காரணம் என்னை? தாய் மொழியைப் பேணாமை, அதனை ஓம்பாமை, அதன்பால் பற்றுள்ளம் கொள்ளாமை. தமிழ்த் தாயின் நிலையை உன்ன உன்ன உள்ளம் குழைகிறது. உலகிலுள்ள எல்லாத் தாய்மார்களிலும் நந்தமிழ்த் தாயே மிக இழிந்த நிலையுற்றிருக்கிறாள். ஒருபோது முடியணிந்து, கோலேந்தி, கலையணிந்து அரியாதனம் வீற்றிருந்த நம் அன்னை-எல்லார்க்கும் மூத்த நம் பெரும் அன்னை இப்போது எந்நிலையிலிருக்கிறாள்? அவள் முடியிழந்து, கோவிழந்து, கலையிழந்து, நலமெலாமிழந்து கிடக்கிறாள்; அவள் உடற் கூறுகளெல்லாம் ஊறுபட்டுக் கிடக்கின்றன. அவள் முகமெல்லாம் குறுமருக்கள் எழும்பி, அவள் எழிலைக் கெடுத்து வருகின்றன; அவள் இருக்கச் சிறு குடிலுமில்லை. அவளைத் தூறும் புற்றும் மூடிக் கொள்ளுமோ என்று அஞ்சுகின்றேன். அவளைப் பழையபடி கொலுவீற் றிருக்கச் செய்யும் பொறுப்பு எவருடையது? உங்களுடையது! உங்களுடையது 1 என்று அறை கூவுகிறேன். தமிழ்நாட்டு மக்கள் யாவரையும் தமிழராகப் பார்க்கும் நெஞ்சம் உங்கள்பால் அரும்பி மலர்வதாக! அம் மலர் பிலிற்றும் இன்பத்தேன் தாயின் நோய்களையெல்லாம் போக்குவதாக!" இவ்வாறு தமிழ்த்தாயின் நோய் நீக்கும் தென்றலாக உலவினார் திரு. வி.க. இது. 'தமிழ்ச் சோலை'யிலே நாம் காணும் காட்சி தாய்மொழிப் பற்றே தாய்நாட்டுப் பற்று' என்பதை உணர்த்து
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/170
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
