பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தமிழ்க்கடல் அலை ஓசை வாராகி அவர் கூறுகிறார், "ஈன்ற ஒருத்தியையும், பிறந்த நாட்டையும் ஒருவன் தாய், தாய், தாய் என்று போற்றுகிறான். ஒருவனுக்குப் பெற்ற தாயின்பால் எத்தகைய அன்புண்டோ அத்தகைய அன்பு அவனை அளித்த நாட்டினிடத்தும் அவனை வளர்க்கும் மொழியினிடத்தும் அவனுக்கு இருத்தல் வேண்டும். பேசுந் தாய்மொழிமாட்டு அன்பில்லா ஒருவன் தாயையும் நாட்டையும் பழித்தவனாவான். நாட்டில் செல்வாக்குப் பெற்றிருப்பவர் பெரிதும் ஆங்கிலம் கற்றவர். இவர்களால் எழுதப்படும் நூல்கள் பல இதுகாலை வெளிவருகின்றன. அவைகளின் கருத்து வேண்டற்பாலதே. ஆனால் அவைகளிலுள்ள மொழியோ அவைகளைத் தொடவும் மனத்தைத் தூண்டுவதில்லை ! என் செய்வது? ஆட்சியை 'ஆக்ஷி'யாகவும், காட்சியை 'காக்ஷி'யாகவும், செலவைச் 'சில'வாகவும், நாகரிகத்தை நாகரிகத்தை 'நாகரீக'மாகவும் காணும்போது தமிழுணர்ந்த எவர் உள்ளந்தான் வருந்தாது! பாஷையாலென்ன? எப்படி எழுதினாலென்ன? என்று சிலவறிஞர் கூறுகிறார்! இக்கூற்றுத் தமிழ்மொழியை மட்டுமே பற்றி எழுவதா? ஆங்கில மொழியைப் பற்றியும் எழுவதா? என்று அவ்வறிஞரைக் கேட்கிறோம். ஆங்கில நினைவு தோன்றும்போது எழும் மொழி வனப்பு தமிழ் நினைவு தோன்றும்போது ஏன் எழுவதில்லை ? 'தமிழ்த் தாயை எவ்வாறாவது குலைக்கலாம்; ஆங்கிலத் தாயை ஓம்பினால் போதும்' என்னும் எண்ணம் இந்நாட்டார்க்கு உதித்திருக்கிறது போலும் ! ஈன்ற தாய் பட்டினி! மற்ற தாய்க்கு நல்லுணவு! என்னே காலத்தின் கோலம்! தமிழ் நாட்டைப் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டு மாயின் தமிழ்மக்கள் முதலாவது தங்கள் மொழியினிடத்துப் பற்றுக் கொள்ளுதல் வேண்டும். தமிழ்மக்கள் எம்மதத்தைப் பற்றி ஒழுகினும் ஒழுகுக. அவர்கள் தாய்மொழிப் பற்றை மட்டும் விடுதல் ஆகாது. மேலும் மொழியினிடத்துப் பற்றில்லாதார் தேச சேவை இடும்பையை அடிப்படையாகக் கொண்டதாக முடியும்.