பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. தமிழ்த் தென்றல் 151 வங்கக்கவி ரவீந்திரநாத தாகூரை உலகம் போற்றுவதற்கு என்ன காரணம்? அவரால் அருளிச் செய்யப்பெற்ற 'கீதாஞ்சலி' என்னும் நூல் இப்போது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருக் கிறது. தாகூர் அதனை முதன் முதல் ஆங்கில மொழியிலா எழுதினார்? முதன் முதல் அவரது தாய் மொழியான வங்கத் திலேதான் அவர் அதை எழுதினார். தேச பக்தியிற் சிறந்த பாலகங்காதர திலகர் 'கீதா ரகசியம்' என்னும் நூலை ஆங்கிலத்திலா எழுதினார்? அவரும் முதலில் அதைத் தமது தாய் மொழியாகிய மகாராட்டிர மொழியிலேயே எழுதினார். இவ்வுலகம் போற்றும் மகாத்மா காந்தி, காந்தி, தம் வாழ்க்கை வரலாற்றைத் தமது தாய்மொழியான கூர்சரத்தி லன்றோ எழுதினார் !" இந்தத் தாய்மொழிப் பற்றும் தாய்மொழியை வளர்க்கும் வேட்கையும் தமிழருக்கெல்லாம் வேண்டும் என்று விளக்கிய திரு.வி.க. அவர்கள், தமிழின் தனிப்பெருமையையும் தமிழர் நாகரிகச் சிறப்பையும் விளக்கி எழுச்சியூட்டினார். அவர் நிகழ்த்திய உரைக் கோவையின் பகுதியே இது. "நமது இந்தியா தேசம் ஒரு கண்டம் போன்றது. அதன் பகுதிகளுள் ஒன்றாயிருப்பது நம் தமிழ்நாடு. அதன் நிலை நாளும் தாழ்வதுதான் ஏன்? உலகத்திலுள்ள நாகரிக இனத்தவர்களுள் தமிழ்மக்கள் தலையாயவர் என்று கூறுவது மின கையாகாது. நேற்றுத் தோன்றிய இனத்தவர்கள் தங்கள் முயற்சியால் எவ்வளவோ அரிய செயல்கள் செய்கிறார்கள். பழங் கூட்டத்தவராகிய தமிழ் மக்கள், தங்கள் நிலை, தங்கள் முன்னோர்கள் நிலை ஆகியவற்றைக் கருதாது வாழ்ந்து வருவதால் அவர்கள் எல்லா வழியிலும் சிறுமையுற்று வருகிறார்கள். முதலாவது தமிழ்மக்கள் தங்கள் பழமையைப் பாராட்டப் பயிற்சி பெறுதல் வேண்டும். நிலநூல், தாவர நூல், உயிர் நூல் முதலிய நூல்களை ஆராய்ச்சி செய்த, கூர்த்தமதியின