பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 தமிழ்க்கடல் அலை ஓசை ராகிய ஹெக்கல் முதலிய அறிஞர், மக்கள் முதன் முதல் தோன்றிய நிலத்தைக் குறிப்பிட்டிருப்பதைச் சரித்திரக்காரர் ஆராயும்பொழுது அந்நிலம் பழந்தமிழ் நாடாகவே முடிந் திருக்கிறதென்று கருதுகிறார்கள். சரித்திர காலத்துக்கு எத்துணையோ நூற்றாண்டுகட்கு முன்னர்த் தோன்றிய தமிழ்மக்கள் பேசிய மொழி இன்னும் இறந்துபடாது நிலவி வருவதை நுண்ணறிவால் ஆராய் வோருக்கு அம் மொழியின் தொன்மையும், வளமும், பண்பும் புலனாகும்." அந்நாட்களில் பழந்தமிழர் வாழ்ந்த வாழ்வையும் நிலையை யும் இந்நாள் மக்கள் உணர எடுத்துக் காட்டிக் கூறுவது இது யாக்கப் "தமிழ் மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு வேண்டிய கல்வித் துறைகளை வளப்படுத்தியிருந்தார்கள். தமிழில் மருத்துவ நூல், கோள் நூல், நீதி நூல், கடவுள் நூல், இலக்கண நூல், இலக்கிய நூல் முதலிய நூல்கள் இருந்திருக்கின்றன. இந் நூல்களில் சில சரித்திர காலத்திற்கு முன்னரே பட்டவை. தமிழ்மக்களின் தன்னாட்சி வீழ்ந்துபட்டமையானும் பல நாட்டார் தமிழ் நாட்டில் புகுந்தமையானும், தமிழ்மொழிப் புலமையுடையார் தொகை அருகிற்று. இவ்விடையூறுகள் நிகழாதிருக்குமாயின், தமிழ்மொழி உலகம் போற்றும் ஒரு பெரும் மொழியாக மாண்புற்றிருக்கும். இக்கால அறிஞர்கள் (ஆராய்ச்சியாளர்கள்) புதிதாகக் காணும் சில பொருள்கள், பண்டைத் தமிழ் நூல்களில் மல்கிக் த் கிடக்கின்றன. இதனால் பண்டைத் தமிழ்ப் புலவர்களின் அறிவின் வெற்றியை என்னென்று பாராட்டுவது? பண்டைத் தமிழ் நூல்களை ஆராய்வோர்பால் அன்பு, அமைதி,பொறுமை, இன்னா செய்யாமை, இயற்கை இன்பம் முதலிய அருங் குணங்கள் பொலிதல் காணலாம். இடைக்காலத்துத் தமிழ் நூல்களிலும், தற்காலத்துத் தமிழ்நூல்களிலும் பல, தமிழ்நாட்டின் சிறப்பைக் குலைக்க வந்த கோடரிக் காம்புகளாய்த் தமிழுக்குக் கேடு சூழ்ந்து வருகின்றன.