பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த் தென்றல் 153 சை மயமான இயற்கை நிலத்தில் வாழ்வு நடத்தி, அவ்வியற்கைத் தமிழைச் சுவைத்தவர்கள் நம் முன்னோர்கள். 'தமிழ்' என்பதற்கு இனிமை என்பது பொருள். 'தமிழ் தழீஇய சாயலவர்' என்றும், 'தமிழ் சேர் காஞ்சி' என்றும்,புலவர்கள் இனிமை என்னும் பொருள்படத் 'தமிழ்' என்னுஞ் சொல்லை ஆண்டிருத்தல் காண்க. பழமை மக்கள் இயற்கையில் ஊறும் தமிழையே (இனிமைச் சுவையையே) பின்னைத் தாங்கள் அவ்வியற்கைப் பொருளுக்கிட்டு வழங்கிய சொல்லிளை மொழிக் கும் வழங்கினார்கள் போலும்! இவ்வாறு 'தமிழ்' பெயர் பெற்றது என்றுரைத்த தமிழ்ப் பெரியார், தமிழ் இசையைக் குறித்துக் கூறுவதையும் காண்க: தமிழ் என்றால் என்ன? இனிமையன்றோ ! தமிழ் இனிமை, இசை இனிமை. இரண்டின் இனிமையும் ஒன்று பட்டால் எத் தகைய இன்பம் சுரக்கும்! தமிழிசையின் மாண்பு என்னே! என்னே! தமிழர் திருவே திரு. அது தமிழிசை தொன்மை வாய்ந்தது; மிகத் தொன்மை வாய்ந்தது. அவ்விசை எந்நாளில் தோன்றியது, வளர்ந்தது, முதிர்ந்தது என்று அறுதியிட்டுக் கூறுதல் இயலவில்லை. சரித்திர காலத்தையும் கடந்து நிற்பது. பல நாட்டவர் இசை நுட்பம் இன்னதென்று தெரியாது திரிந்த காலத்தில், தமிழ் நாட்டவர் இசை நுட்பத்தைச் செவ்வனே தெளிந்திருந்தனர் என்பதற்குச் சான்றுகள் பலபடக் கிடக்கின்றன. தமிழர் கோவில்களும், மறைகளும், காவியங்களும், ஓவியங்களும் பிறவும் எடுத்துக்காட்டுகளாக இலங்குகின்றன. பல் தமிழ்நாடு கலைக்கூடமாய்ப் பொலிந்த காலமும் உண்டு. இது பண்டைப் பெருமை. பிற்காலத்தில் தமிழ்நாடு கலைகளை இழந்தது; இசைக் கலைகளில் பல கூறுகளை இழந்தது; பொல்லா விலங்குகளையும் வயப்படுத்த வல்ல யாழை இழந்தது. இது பிற்காலத் தமிழ்மக்களின் கலை ஈனத்தால் விளைந்தது. இசைக்கு ஏற்றந் தந்திருந்த பழந்தமிழகத்தில் தமிழ்ச் சொல்லோவியங்களைக் கொண்ட இன்பப் பெட்டகங்கள், கலித்தொகை, நெடுநல்வாடை, சிலப்பதிகாரம் முதலிய