154 தமிழ்க்கடல் அலை ஓசை நூல்கள் பிறந்தன. இது மட்டுமா? அத்தகைய கலை மலிந்த தமிழ் நடமாடிய நாட்டினையும் காண்மின்! குமரியாறும் பஃறுளியாறும் வளஞ்செய்த செழிய நிலப் பரப்பே குமரி நாடென்று சொல்லப்படுவது. இப்பொழுதுள்ள இந்துமகா சமுத்திரம் என்னும் பெரு நீர்ப்பரப்பு நிலப்பரப்பா ருந்த தென்றும்,ஆண்டே மக்கள் தோற்றம் முதன்முதல் உற்றதென்றும், அந்நிலம் பின்னைக் கடலால் விழுங்கப்பட்ட தென்றும், ஆசிரியர் ஏர்னெசுடு ஹெக்கல், ஸ்காட், எலியட் உள்ளிட்ட அறிஞர் பலர் தமது ஆராய்ச்சியிற் கண்ட உண்மையை உலகிற்கு உணர்த்தியிருக்கின்றனர். லெமூரியா என்னும் நிலப்பரப்பே தமிழ்நூல்கள் கூறும் குமரி நாடு. அந்நாடு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்க் கடலால் கொள்ளப்பட்டது. பஃறுளியாற்றின் நிலையைப் புறநானூறு முதலிய நூல்கள் கூறுகின்றன. அதன் அழிவைச் சிலப்பதிகாரம் முதலிய நூல்கள் கூறுகின்றன. பஃறுளியும் குமரியும் அவை ஓடிய நாடும் கடலால் விழுங்கப்பட்டன. அந்நாட்டில் வாழ்ந்த மக்களிடைப் பூத்த நாகரிகமும் அறிவுமே இப்பொழுது உலகத்தில் பரந்தும் விரிந்தும் மருவியும் நிலவுகின்றன. இத் தொன்னிலப் பரப்பின் அழிவுபோக எஞ்சி நிற்பதே இதுபோழ்து நாம் வாழும் தாயகம். இத் தமிழகத்தின் தொன்மையை எக்கால அளவுகொண்டு கூறுவது? 'இத் தொன்மை வாய்ந்த நாட்டிற் பிறந்தவர்கள் நாம்' என்று சொல்லும்போது, என்னை அறியாதே என்பால் இறுமாப்பு எழுகின்றது." தொன்மையின் பெருமையில் இவ்வாறு இறுமாப்பு கொள்ளுவதாகக் கூறிய அடக்கம் மிகுந்த தமிழ் உள்ளம், அவர் காலத் தமிழ்நிலை பற்றி எண்ணி அலறியதையும் காணுங்கள். "இப்பொழுது நமது தாய்மொழி எந்நிலை யுற்றிருக்கி. றது? தமிழ்த்தாய் யாண்டு உறைகின்றாள்? அரசாங்கத்தில் வீற்றிருக்கின்றானா? மன்றங்களில் வதிகிறாளா? சட்ட சபை
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/175
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
