பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களில் தமிழ்த் தென்றல் 155 வாழ்கிறாளா? கல்லூரிகளெனப்படும் கல்வி நிலையங் களிலாதல் அவளைப் பார்க்கலாமா ? தமிழ்ப் பத்திரிகைகளி லாதல் அவளுக்கு இடமுண்டா? பல பத்திரிகைகள் தமிழ்த் தாயின் சிகையை, கழுத்தை, இடுப்பைக் கொய்யும் இறுவா ளாகவும், உடைக்குந் தண்டமாகவும் அன்றோ உலவுகின்றன? சிலர் சிற்சில இடங்களில் 'தமிழ், தமிழ்', என்று கண்ணீர் விடுகிறார். அவருள் சிலர் தமிழுக்கு ஆக்கந்தேடுவதுபோல் அழிவு தேடி வருகிறார். தமிழ்த்தாய் நானா பக்கங்களிலும் தாக்கப்பட்டு வலியிழந்து வீழ்ந்து கிடக்கிறாள். ஐயுந் தொடர்ந்து, விழியுஞ் செருகி' அவதியுறு நிலையை நந்தாய் அடைந்திருக்கிறாள். தமிழ் வேந்தர்கள் காலத்தில் 'கன்னி' என்றும் அழியாதவள் என்றும் பெயர் தாங்கிய நம் அன்னை இக்காலத்தில் இறந்துபடுவளோ என்னும் ஐயமும் நிகழு கின்றது." இவ்வாறு ஐயம் எழுவதாகக் கூறிய தமிழ்ப்பெரியார் அவர்களே, வரலாற்றை நோக்கி - இளைஞர்களே ! தமிழ் ஒரு நாளும் அழியாது! அதனை அழிக்க எந்நாளும் எவராலும் எதனாலும் ஆகாது! எனப் புத்துணர்ச்சியூட்டுகிறார். "இதே பழந்தமிழ் நாட்டைக் கடல் கொண்டது பல முறை. அதனாலும் தமிழ் அழியவில்லை. எத்துணையோ புதுமக்கள் தமிழ்நாட்டில் குடி புகுந்தார்கள். அதனாலும் தமிழ் அழியவில்லை. தமிழைத் தொலைக்கவும் சிலர் முயன்றனர். அவர்தம் முயற்சியாலும். தமிழ் அழியவில்லை. தமிழ் மொழிக்குப் பின்னர் எத்துணையோ மொழிகள் தோன்றி இறந்தன, ஆனால் தமிழ் மொழியோ சாலா- மூவா மருந்தாக உலகில் நிலவுகிறது." என்று அறை கூவினார். இவ்வாறு 'என்றும் உளதாகும் இன்றமிழ் என்னும் உணர்ச்சியூட்டி, வாழ்க்கையின் துறைகள்தோறும் தமிழ். மொழியையே கைக்கொண்டு தமிழராக வாழவேண்டும் என்று அறிவுறுத்தி, தமிழ்மக்களிடையே தாய்மொழிப்பற்று ஓங்கச் செய்து, தமிழ்மொழியின் மறுமலர்ச்சிக்கு-தமிழ் அன்னையின் ஆட்சிக்கு அடிகோலினார் தமிழ்ப் பெரியார் திரு.வி.க.எனில் அது மிகையாமோ? வாழ்க தொண்டுள்ளம்! வளர்க தாய்மொழிப்பற்று 1 1