அன்னையைப் போற்றுவோம் ! முப்புரமும் நீலத் திரைக் கடல்கள் சூழவும் வடபுரத்தே திருவேங்கடமலை வானளாவி நிற்கவும் அவற்றினிடையே வாழும் நாலரைக் கோடி தமிழ் மக்களுக்கு இன்று மூச்சாக நின்று உயிர் ஊட்டி வரும் தமிழ், சில பல நூற்றாண்டுகட்கு முன்னர், இதனி னும் பல பலமடங்கு விரிந்து பரந்த நிலப்பரப்பு முழுவதும் வாழ்ந்தோருக் கெல்லாம் உயிர்க்காற்றாக நிலவிய மொழி யாகும். இன்று தமிழகத்திற்கு உரிய மொழியாக மட்டுமே அமைந்து, கூனிக் குறுகிக் காணப்படும் நம் தாய்மொழி, முன்னர், 'விந்திய மாமலை வரைப் பரவிக் கிடந்த தென்னகம் முழுவதற்குமே உரியமொழியாகவும், அதற்கு முன்னர், குமரி முனைக்குத் தெற்கே இன்று பரவிக் கிடக்கும் கடல்பரப்பு முற்றும் குமரிக்கண்டம் (இலெமூரியா) என்னும் பெருநிலமாகக் கிடந்த காலை, அப் பரப்பு முழுவதும் தனியாட்சி நடாத்திய மொழியாக வும் வழங்கியதாகும். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றி மூத்த குடியினராகிய மூவேந்தர் என்ற பெருமைக்குரிய முடி மன்னர் வழி தோன்றக் காரணமான தமிழர் மரபு - தன் தொன் மைக்குச் சான்றாகவும், தன் வளர்ச்சிக்குத் துணையாகவும், தன் பெயருக்கு ஏதுவாகவும் பெற்ற தமிழ்,தொல்லுலகுடன் பிறந்து நல்லுலகம் காணும் வகை வளர்ந்து, இன்றும் நிலவுவதாகும். அக்காலத் 'தமிழ்' இக்காலத் 'தமிழுடன்' வரிவடிவில் வேறு பட்டதாகலாம். ஆயினும் அன்று முழங்கிய 'ஒலிவடிவே' தான் இன்றும் வழங்கும் பெருமையுடையதாகும். 'வரி' வடிவம் என்னும் 'உடல்' மாறுபடினும் 'ஒலி' வடிவம் என்னும் 'உயிர்' ஒன்றாகவே உள்ளது என்பது தெளிவாகும். இன்று தென்னகத்தின் பகுதிகளான கேரளத்தில் வழங் கருநாடகத்தில் வழங்கும் கன்னடமும், கும் மலையாளமும்,
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/177
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
