அன்னையைப் போற்றுவோம் 157 ஆந்திரத்தில் வழங்கும் தெலுங்கும், குடகில் வழங்கும் துளுவும், சில நூற்றாண்டுகட்கு முன்னர் வழங்கிய தமிழ், பெற்ற மாற் றத்தின் பயனாக அடைந்த திரிபுகளேயாகும். வரலாற்றுத் துறை அறிஞர் 'திராவிடம்' என்னும் சொல்லால் குறிப்பிடும் மொழிக் குடும்பமும் அம்மொழி பேசும் மக்களும் தமிழ்த் தொடர் பானவர்; தமிழினின்றும் பிறந்த ஓர் இனத்தவர் என்பதையே தெளிவாக்கும். இசையும்,கலையும், மொழியின் வழியே இலக்கியமும்,இசையும், கலையும், கற்பனை வளமும், நாகரிகமும், நாட்டாட்சி முறையும், பண்பும், பண்பாடும் பிறந்து வளர்ந்துள்ளன. இவை யாவும் ஒரு மொழி வழங்கிய வட்டாரத்தின் தனித் தன்மைகளாக, அடையாளங் களாக இன்றும் நிலவுவன. ஏடெடுத்துச் செய்யுள் ஒன்றைப் படித்தாலும், யாழெடுத்துப் பாட்டொன்று இசைத்தாலும், இயற்கையின் நலத்தினை வருணித்தாலும், செயற்கையின் சிறப்பினை விளக்கினாலும், வண்ண ஓவியமானாலும், கருங்கற் சிலையானாலும், வானளாவும் கோபுரமானாலும், குடியிருப்புமனையானாலும், வடித்தெடுத்த வேலானாலும், பெண்டிர் போற்றும் அணிமணியானாலும், உடுத்தும் உடையானாலும், தொடுக்கும் பூமாலையானாலும் இத்தனையிலும் - ஒரு நெருங்கிய தொடர்பு, பிறமொழி வட்டாரத் தினொடு காணப்படாததோர் ஒற்றுமை இருப்பதை நாம் காண லாம். இதனையே 'திராவிடம்' எனனும் பெயர் மலைவிளக்காக உணர்த்திக் கொண்டுள்ளது. விளக்கு - குருடருக்கேயன்றிப் பிறருக்கெல்லாம் ஒளி காட்டத் தவறுவதில்லையன்றோ ! இந்தப் பேருண்மையை உணர்ந்து பிறருக்கும் உணர்த்தும் வாயிலாகவே, மனோன்மணீயம்' சுந்தரனார் அவர்கள் தமது தமிழ்த்தாய் வணக்கப் பாடலை இயற்றியுள்ளார். கடல் சூழ்ந்த வையகமென்னும் பெண்ணுக்கு முகமென விளங்கித் தோன்றும் பாரதமெனும் இந்தியத் துணைக் கண்டத் தில், சிறிய பிறைமதியன்ன நெற்றியாக ஒளிரும் தெற்குப் பகுதியும் அதில் அழகாகப் பொருந்திய திலகமெனச் சுடரும்.
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/178
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
