158 தமிழ்க்கடல் அலை ஓசை திராவிடமும் அமைந்திருக்க, அத் திலகத்தின் மணம் பரவினால் ஒப்ப அனைத்துலகத்திலும் புகழ் பரப்பிச் சிறந்து விளங்கு கின்றாள் தமிழ்ச்செல்வி என்றார் அவர். "நீராருங் கடலுடுத்த நிலமடைந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமதில் தக்கசிறு பிறை நுதலும் தரித்த நறுந் திலகமுமே தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநற் றிருநாடும் அத்திலக வாசனைபோல் அனைத் துவகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழ் அணங்கே " எத்தனை முறை படித்தாலும் - இன்பமன்றோ இப்பாடல்! அத் துடன் நிறுத்தவில்லை அப்பெரும்புலவர். நமது தமிழ், கன்னித்தமிழ், என்றுமுள தென்றமிழ், இறைமைகொண்ட இயற்கைத்தமிழ், திராவிட மொழிகளை ஈன் றெடுத்த தாய்த்தமிழ் இறவாத புகழ்கொண்டவளருந்தமிழ் என் னும் பேருண்மைகளை எல்லாம் அழகுபட உணர்த்தியுள்ளார். 'பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி இருப்பதுபோல், கன்னடமும், களிதெலுங்கும் கவின்மலையா ளமும் துளுவும் உன்னுதிரத் துதித்தெழுந்தே ஒன்றுபலவாயிடினும் ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே தமிழ்க் கன்னியின் வளரும் ஆற்றலும் வாழ்வளிக்கும் ஆற்ற லும், அதனை உணர்ந்த பெரியாரைச் செயல் மறந்து வாழ்த்தச் செய்கிறது பாடிப் பரவிப் பணிந்து நின்று போற்றுகின்றார் அவர். அதுமட்டுமின்றித் தென்னகத்தில் மெல்ல மெல்லப் புகுந்து, வைதீக ஏடுகளைத் துணையாகக் கொண்டு, இறைவழி பாட்டுத்துறையில் இடம் பிடித்து. மக்கள் மனத்தில் ஆதிக்கம் கொண்டு, தமிழ்மொழியின் உரிமைக்கும் உயர்வுக்கும் ஊறு செய்துவரும் 'வடமொழி' உலகவழக்கில் இன்று நிலவாது அழிந்துபோய்விட்டதனை, அதனைத் தெய்வமொழி என்று இன்றும் நம்புவோர் தெளிவடையுமாறு எடுத்துக்காட்டுகின்றார்.
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/179
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
