பணிந்துரை xvil இந்த ஏட்டின் நோக்கம் - எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! என்னும் புரட்சிக் கவிஞரின் முழக்கம், அதன் பொருள் உணர்ந்த தமிழ் இளைஞர் தம் முழக்கமாக வேண்டும் என்பதே. இந்த ஏட்டில் வந்துள்ள கட்டுரைகள் யாவும்- பத்து ஆண்டுகட்கு முன்னர் சிங்கப்பூர்- 'தமிழ் மலர் ஏட்டில் கிழமைதோறும் பொலிவுடன் வெளியிடப் பட்டவையாம். நான் எழுத வேண்டும் என்று விரும்பி, என்னிடம் கேட்டுப் பெற்று வெளியிட்ட அதன் ஆசிரியர் திரு. செல்வகணபதி அவர்களின் அன்புக்கு நான் பெரிதும் நன்றியுடையேன். நாடும் மொழியும் நாளும் உயர்ந்திட ஓய்வே நாடாது உழைத்திடும் செம்மல், தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமது பல்வேறு அலுவல்கட்கிடையிலும் இந்த ஏட்டினைப் படித்துப் பார்த்து ஏற்றதொரு அணிந்துரையை விருப்புடன் வழங்கியமை - என்பால் கொண்ட அன்பின் அடையாளமே யாம். அவர்தம் அன்பில் விளைந்த அணிந்துரைக்கு என் நன்றி என்றும் உரித்தாகும். இதனை ஒரு நூலாக வெளியிட இசைந்து, சிறப்பாக அச்சிட்டுள்ள 'தமிழ்த் தொண்டே இறைத் தொண்டு' என்று உள்ளங் கொண்ட, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்கும், அதன் நிருவாகத் தலைவர் மதிப்பிற்குரிய பெரியவர் திரு. வ. சுப்பையா அவர்கட்கும் என் நன்றி நாளும் உரித்தாகும். அஅன்பர்களி
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/18
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
