பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னையைப் போற்றுவோம் 159 வாழாத வடமொழி, வாழும் தெய்வங்கட்கு உரிய மொழி என்று வாதிடுவோரும், வாழுகின்ற மொழியேயன்றி, வேறு பல மொழிகளையும் பிறப்பித்து வாழச் செய்த தெய்வமொழியாள தமிழின் பெருமையை உணரும் வகை கூறுகிறார். தெய்வத்தின் மொழி வடமொழி என்பாரும், தெய்வமே தமிழ்மொழி என்பதை உணர்ந்தால் போற்ற முற்படுவரன்றோ! - நாகரிகமே அறியாது நாட்டுமுறை காணாது, விலங்குலகில் வீறிட்டெழுந்து காடாண்ட மாக்கள் பிறிதொரு சூழலில், நானில் வாழ்வுகண்ட மக்களையே, அடக்கியாண்ட செய்தியைப் போன் றதே இதுவும். எனினும், வரலாறு சுழலாமலா போகும்? எப்படியோ இன்று தமிழின் தொன்மை, மேன்மை, வலிமை, வண்மை, தனிமை, செம்மை, இனிமை, நன்மை முதலிய சிறப்புகள் யாவும் புலப்படத் தொடங்கியுள்ளன. . இன்றும், கோயில் வழிபாட்டிற்கும் சடங்குமுறை நிகழ்ச்சி கட்கும் 'வடமொழி' யே உரிமை கொண்டாடுகின்றது. இசை நிகழ்ச்சிகட்கும் கலைவிழாக்களுக்கும் தெலுங்கும் இந்தியும் முந்துகின்றன. நீதி மன்றத்திலும் விஞ்ஞானப் பகுதியிலும் ஆங்கிலமே கோலோச்சுகின்றது. அரசியல் பீடத்தில் 'இந்தி' டம் பிடித்துக் கொண்டு வருகிறது. தமிழின் தனிச் சிறப்புகள் கண்டறியப்பட்ட இக்காலத் தும், தமிழ்நாட்டில் தமிழே ஆட்சிமொழி என்று அறிவிக்கப் பட்ட பின்னரும் அனைத்தும் பயிற்றும் மொழியாகக் கல்லூரி களில் இடம்பெற்ற பாடில்லை. ஆம் - 'தமிழ்' வாழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழர்கள் தாம் காலத்தோடு ஒட்டி வாழவில்லை. எனவேதான் தமிழுக்கு முழு வாழ்வில்லை. அனைத்துத்துறையிலும் தமிழ் முதல் இடம் பெறவில்லை. தான் பிறந்த மண்ணில் தன் வாழ்வுக்குப் போராடும் ஏழைத் தமிழனாகத்தான் - 'தமிழ்மொழியும்' போராடிக்கொண் டுள்ளது. 'உலக மொழிகளில் ஒன்று தமிழ்' என்னும் உணர் வோடு தமிழன் தலைநிமிர்ந்து நின்றாலல்லவா தமிழும் தனிநிலை பெறமுடியும்?