பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 தமிழ்க்கடல் அலை ஓசை பரந்து விரிந்து கிளைத்து வளர்ந்து செழித்து முழங்கிச் செங்கோலோச்சி நின்றது தமிழ் அந்நாள். தேய்ந்து சுருங்கித் தளர்ந்து மெலிந்து வளைத்து ஒடிந்து தாழ்ந்து நின்றது தமிழ் இந்நாள். ஆனால், தமிழ் இனி மெல்ல மெல்லத் துளிர்த்து, ஓங்கி வளர்ந்து கிளைத்து நின்று தழைத்து வாழும்; திட்டவட்ட மான மறுமலர்ச்சியடையும்; பூத்துக் குலுங்கி ஆட்சிமணங் கொண்டு திகழும் என்று உறுதியாக நம்புதற்குரிய அரசாட்சி ஏற்பட்டுள்ளது இன்று. எண்ணம் பேச்சு எழுத்து யாவும் தமிழாகவேண்டும். அறிவு ஆராய்ச்சி, இலக்கியம், விஞ்ஞானம், யாவும் தமிழிலே பிறத்தல் வேண்டும். கல்விக்கூடம், ஆட்சிமுறை, சட்டசபை, நீதி மன்றம் யாவும் தமிழால் நடைபெற வேண்டும்; பொறியியல் கல்வி, தொழிற்கூடக் கல்வி, மருத்துவக்கல்வி, யாவும் தமிழால் பயிற்றுவிக்கப்படல் வேண்டும். கோயில் வழிபாடு சமய வழிபாடு, திருமணம் முதலான சடங்கு நிகழ்ச்சிகள் யாவும். தமிழிலேயே நிகழ்தல் வேண்டும். இசையும், கூத்தும், கலை யும், காட்சியும் யாவும் தமிழ்ச் சுவை மிகுத்தல் வேண்டும் என்று இளைஞர் உலகம் எண்ண முற்பட்டுள்ளது இந்நாள். இளைஞர்களின் மொழி ஆர்வம் சிறந்து நற்பயன் நல்க, முன்னாள் கருத்துடைய முதியவர்கள், முன்கொண்ட முறைதனை மாற்றுவதற்கு மனமற்றோர், இனியும் முட்டுக்கட்டை இடுவதனை நிறுத்தி -இளைஞர் தம் முயற்சிக்குத் துணை நிற்க வேண்டும். மொழி வாழ வழி விடுவது, தமிழ்மொழியின் ஆக்க வழியில் குறுக் கிட்டுநிற்கும் முதியோர் கடனாகும். தமிழ் மொழியினைத் தம் விழியெனக் காத்துவளர்த்துப் புத்தொளி காணும் வழி நடத் தலே இளைஞர் கடனாகும். பெற்றதாயின் வாழ்விலே பிறந்த சேய்களின் வாழ்வு பிணைந்துள்ள தன்றோ ! 'அன்னை' மகிழ்ந்திடின் பிள்ளைகட்குத் தேனன்றே! தமிழ்மக்கட்கே உரித்தான அன்னையைப் போற் றிப் பணிகெய்ய அனைவரும் உறுதிகொள்வோமாக!