பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D பேராசிரியர் அன்பழகன் அவர்கள் திருவாரூரையடுத்த காட்டூரில் 1922ஆம் ஆண்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் திரு. மு. கலியாணசுந்தடனார் அவர்கள் தேசிய இயக்கத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஈடுபட்டவர். அன்பழகன் இளமையில் ராமையா என்னும் பெயருடன், மாயவரம் உயர் நிலைப்பள்ளியில் பயின்றார். பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே பெரியாரின் இந்தி எதிர்ப்பு இயக்கத்திலும், பகுத்தறிவுக் கொள்கை விளக்கத்திலும் ஈடுபட்டார். பேரறிஞர் அண்ணா அவர்களையும், பெரியார் அவர்களையும் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துப் பேசச் செய்த பெருமை இவருக்குண்டு. 1944முதல் சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றினார். 1957ல் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் 1962ல் தமிழகச்சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் திகழ்ந்தார். 1967ல் நாடாளுமன்ற உறுப்பினராகி, தி. மு.க. தலைவராகப் பொறுப்பேற்றார். 1971ல் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப் பெற்று, கலைஞரின் அமைச்சரவையில் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பணியாற்றுகிறார். நம் தமிழ்மொழிப் பற்றிலேயே வளர்ந்து, தனித்தமிழ் ஆர்வங்கொண்டு, பேச்சாலும், எழுத்தாலும் தமிழ்த் தொண்டாற்றி வருபவர். கொள்கையில் தெளிவு - அரசியலில் துணிவு - நண்பர்களிடத்தில் கனிவு - பெரியோர்களிடத்தில் பணிவு ஆகியவை இவர்தம் சிறப்பியல்புகள். உரிமை வாழ்வு, கலையும் வாழ்வும், விடுதலைக் கலைஞர், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் முதலானவை இவர் இயற்றிய பிற நூல்கள 120.00