பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிக் காட்சி! முப்பது ஆண்டுகட்கு முன்னர் ஒரு நாள் கல்லூரிப் படிப்பு முடிந்த நிலையில், தண்டமிழ் வழங்கும் திருநிலத்தின் தென்கோடியாகத் திகழும் குமரிமுனைக்குச் சென்றிருந்தேன். அந்த முனையின் கண்கொள்ளாக் காட்சியைப் பற்றியும் கவினுறு மாட்சியைப் பற்றியும் முன்னரே கேள்விச் செய்தியாக அறிந்திருந்தனனாயினும் கண்குளிரக் காணப் பெற்றபோது பெரிதும் களிப்புற்றேன்.