2 தமிழ்க்கடல் அலை ஓசை ஓரிரு நண்பருடன் கடற்கரையில் உலாவச் சென்றேன். கன்னி ஒருத்தியைத் தொட்டுத் தொட்டு மகிழும் ஒரு காளையைப் போன்று, கடல் மணாளன் நிலமகளைத் தன் அலைக் கரங்களால் தொட்டுத் தொட்டுக் களித்துத் தான் எழுப்பும் அலை ஓசையால் அவள் புகழையும் பாடிக் கொண்டிருந்தான். காதலரைக் களிப்புறச் செய்ய, தென்றல் கவரி வீசிக்கொண் டிருந்தது. அலை நுரைகளும், கரைமணலும் ஒன்றுடன் ஒன்று கலந்தும் கரைந்தும், குளிர்ந்தும் காய்ந்தும் குழைந்து கொண்டிருந்தன. மணப்பெண்ணுக்கு வழங்கும் மாப்பிள்ளை சீர் எனக் கரையிலே குவிந்த சங்குகளும் சிப்பிகளும், கூழாங் கற்களும் காட்சியளித்தன. அதே மணற்பரப்பில்தான் எத்தனை எத்தனை வண்ணப் பொடிகள்! ஒரு பக்கம்கண் மையை ஒத்த கருநிற மணல், மற்றொரு பக்கம் குங்குமக் குழம்போ என்னும்படி சிவப்புப்பொடி! வெள்ளை நிற மணலோடு போட்டியிடும் பொன்னிற மணல்! கடற்கரைப் பரப்பிலே வானவில் தரும் வண்ணக்காட்சி! ஒரு கடற்கரையை அடுத்துச் சிறுசிறு குன்றுகள் பல. குன்றின் உச்சியில் ஏறி நின்று, அதன் சூழல் அனைத்தையும், நாற்றிசைக் காட்சிகளையும் காண முனைந்தேன். அதன் மூன்று பக்கங்களிலும் நீலவண்ணக் கடல் வடதிசையிலோ, மேலும் பல குன்றுகளும், சோலைகளும், சரலைகளும், வயல் களும்- கண் நிறைத்தன. கீழ்ப்புறக் கடலும், மேற்புறக் கடலும், தென்புறக் கடலோடு கைகோத்து நின்று, குமரியைச் சுற்றி அவள் தப்பி ஓடாதவாறு மடக்கியது போன்று தோன்றியது. குமரிமுனை யின் முப்புறமும் கடல்களும், வடதிசையில் சிறு சிறு குன்றுகளும் நின்ற கோலம், முப்புறமும் கடல்களும், வடதிசையில் வேங்கடப்பெருமலையையும் எல்லையாகக் கொண்ட தமிழகத்தின் சிறு வடிவ அச்சு எனவே விளங்கிற்று. மறுநாள் விடியற்பொழுதில், வைகறைக் காட்சியையும் கண்டேன். கீழ்வானம் தன்கருமையைக் கடல் நீரில் கரைத்து
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/21
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
