பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிக் காட்சி 3 விட்டு, வெள்ளுடை உடுத்தலாயிற்று. தாமரைப் பொய்கை யினில் மூழ்கிய பொன்னிற மேனியாளொருத்தி - தன் கரங்களை உயர்த்தியவாறு எழுந்து ஒளி முகத்தைக் காட்டுதலை ஒப்ப -கருநீலக்கடலினிலிருந்து பளபளக்கும் ஒளிக்கதிர்களாம் கரங்களை நீட்டி, இருட்பகையை ஓட்டிச் செக்கச் சிவந்த முகங்காட்டி, வெற்றிநகையெனச் சுடரொளி கூட்டி, வீண்ணில் வீசிய தணல் பந்தென உயரும் எழு ஞாயிற்றின் காட்சி தந்த இன்பத்தில் அமிழ்ந்தேன். அன்று முழு நிலா நாள். காட்சியும் தனிச்சிறப்புடைய விருந்தாயிற்று. மாலைக் மாலையில், மேற்றிசை வானம், குங்குமம் கொட்டிய வெள்ளித் தட்டென, உருக்கி வார்க்கப்படும் இரும்புப் பாளமென - தனிச்சிவப்பு நிறமும், பல்வேறு வண்ணமும் குழைத்து பளபளத்தது. மேற்றிசை மலைகளுக்கு அப்பால் கதிரவன் மறைவதாகத் தோன்றும் காட்சியையே - தமிழகத் தின் பல பகுதிகளிலும் கண்டவர்க்குக்- கதிரவன் கடலுள் மூழ்கிய அக் காட்சியும் புதுமையே ! கதிரவன் எழுந்தவேளை, தன் பால் முகம் மறைப்பினும் ஞாயிறு மறைந்த வேளை, தன் ஒளிநகை காட்டி உலகத்து உயிர்களை எல்லாம் மதிமயங்கச் செய்யும் திங்கள், அன்று அதன் முழு வடிவில் முளைத்தெழுந்தது. மேற்றிசையில் ஞாயிறு மூழ்கு முன்னரே, கீழ்த்திசையில் திங்கள் முகிழ்த்து எழுந்து காட்சி நல்கியது. ஞாயிறும், திங்களும், தத்தம் இயல்பினால், தணலும் நீருமாக, வெம்மையும் தண்மையுமாக, முரண்பட்டனவெனினும், உலகத்து உயிர்கட்கெல்லாம் வாழ்வும் இன்பமும் அளிப்பதில் ஒன்றற்கொன்று துணையாக நிற்கும் தன்மையை உணர்த்துவது போன்று, அவை இருபக்கமும் காட்சி யளித்தன. அவை ஆணும் பெண்ணுமாகக் கற்பிக்கப்பட்டனவல்லவோ சில கவிஞர்களால்! அதனால் தாள்போலும் காதலரைப் போன்று, ஒன்றைக் கண்டு ஒன்று மறைந்தும், ஒன்றை ஒன்று தேடியும், தொடர்ந்து ஓடியும் வருகின்றனபோலும் உலகோர் கண் களுக்கு.